சூர்யா – வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ கைவிடப்பட்டதா? வெளியான உண்மை நிலவரம்

By subhashini · 6/6/2025

வாடிவாசல் படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘கங்குவா’. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் சிவா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் கொடுத்து இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதை அடுத்து சூர்யா அவர்கள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான

கங்குவா படம் :

இதை அடுத்து சூர்யா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் பலரும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று தான் வாடிவாசல். இந்த படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்குகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். சி.சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி இந்த படம் எடுப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால், வெற்றி மாறன் விடுதலை படத்தினுடைய வேலைகளில் பிஸியாக இருந்ததால் வாடிவாசல் படம் எடுக்க தாமதமானது. இருந்தாலுமே வாடிவாசல் படத்திற்கான டெஸ்ட் சூட் புகைப்படத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தார்கள்.

வாடிவாசல் படம்:

அதற்குப்பின் படம் வெளியாகுமா? என்று பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த படத்திற்காக நடிகர் சூர்யா இரண்டு காளைகளை தன்னுடைய வீட்டிலேயே வாங்கி வளர்த்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்திற்கான சில அனிமட்ரானிக்ஸ் வேலைகளும் நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. சமீபத்தில் சூர்யா- வெற்றிமாறன் உடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டு இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாடிவாசல் கைவிடப்பட்டது:

அதாவது, பல மாதமாகவே இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சூர்யாவினுடைய தேதிகள் ஒத்து வராததினால் இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சூர்யா அவர்கள் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து வேறு சில இயக்குனர்களிடமும் சூர்யா கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

காரணம் இது தான்:

இன்னொரு பக்கம் வெற்றி மாறன் தன்னுடைய வேறொரு படத்தின் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.
வாடிவாசல் படத்திற்கு நாட்கள் அதிகமாக தேவைப்படும் என்பதால் இப்போதைக்கு வாடிவாசல் படைத்த பண்ண வேண்டாம் என்று சூர்யா முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வெற்றிமாறனும் வேறு படத்தை எடுக்க தயாராகி இருக்கிறார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full