நான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியில் உறுப்பினரா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தாடி பாலாஜி
விஜய் அரசியல் கட்சி குறித்து நடிகர் தாடி பாலாஜி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவர் 1997 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். அதற்கு பின் இவர் பல படங்களில் நடித்து இருந்தார். இவர் பெரும்பாலும் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து இருந்தார்.
பின் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருந்தார் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பாலாஜி கலந்து கொண்டிருந்தார். அதோடு இந்த நிகழ்ச்சியில் இவருடைய மனைவி நித்யாவும் கலந்து இருந்தார். சில ஆண்டுகளாகவே தாடி பாலாஜிக்கும் அவருடைய மனைவி நித்யாவிற்கும் இடையே பிரச்சனை இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர்களுடைய விவகாரம் கோர்ட் வரை சென்றிருக்கிறது.
பாலாஜி குறித்த தகவல்:
தற்போது இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும், இவர்களுக்கு மத்தியில் சர்ச்சை நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட நித்யா தன்னுடைய கணவர் பாலாஜி மீது புகார் அளித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் தாடி பாலாஜி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக சேர்ந்து விட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்திருந்தது. இது தொடர்பாக தாடி பாலாஜி, புஸ்ஸி ஆனந்த் திடீரென்று ஒரு நாள் கூப்பிட்டார். பாலாஜியை மாநாட்டுக்கு வேலை செய்ய சொல்லுங்க என்று விஜய் சொன்னதாக என்னிடம் சொன்னார்.
https://www.youtube.com/watch?v=lY-oUYKAxqM
விஜய் கட்சியில் பாலாஜி:
அப்ப இருந்தே நான் அந்த வேலையை தொடங்கி விட்டேன். மாநாட்டுக்கு லட்சக்கணக்கான பேர் வர இருக்கிறார்கள். மாநாட்டில் தளபதி பேசுறது கேட்க எல்லாருமே ஆவலாக இருக்காங்க. அந்த மாநாட்டுக்கு பிறகு பாருங்க தமிழக வெற்றிக் கழக கொடி தான் எங்கேயும் பறக்கப்போகுது என்றெல்லாம் பாலாஜி பேசி இருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இது குறித்து பலருமே விமர்சித்து வந்தார்கள்.
பாலாஜி குறித்த விமர்சனம்:
குறிப்பாக இவர் திமுகவில் உறுப்பினராக இருந்து எப்படி விஜய் பக்கம் போனார் என்றெல்லாம் விவாதம் தொடங்கி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் பாலாஜி , நான் விஜய் சார் கட்சியில் எல்லாம் சேரவில்லை. அவங்க இஷ்டத்திற்கு எதையாவது எழுதிக் கொண்டிருக்கிறார்கள். புஸ்ஸி ஆனந்த் என்னை கூப்பிட்டார். நானும் போய் பார்த்தேன். மாநாடு தொடர்பாக சில வேலைகளை பாலாஜியிடம் குடுங்க என்று விஜய் சார் சொன்னதாக சொன்னார். சந்தோஷமாக நானும் செய்கிறேன் என்றேன்.
பாலாஜி பேட்டி:
சில வேலைகளையும் செய்தேன். அவ்வளவுதான். அதுக்குள்ள என்னென்னமோ எழுதுறாங்க. இப்ப தெளிவாக சொல்கிறேன், நான் அந்த கட்சியில் உறுப்பினராக எல்லாம் சேரவில்லை. இதை நீங்கள் எல்லாரிடமும் சொல்லுங்கள் என்று கூறியிருந்தார். சமீபத்தில் தான் விஜய் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றியிருந்தார். அந்த கொடியில் வாகை மலரும், இரு பக்கமும் யானை படமும் இடம் பெற்றிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தான் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெற இருக்கிறது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.