பெரும்பாலும் சினிமா உலகில் நடிக்கும் பல நடிகர்கள் சினிமா பின்னணி உள்ளவர்களின் மூலம் வந்தவர்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தேனி முருகன். மேலும், இவர் இயக்குனர், நடிகருமான பாரதிராஜாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை இவரே சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறியுள்ளார். பாரதிராஜாவுக்கு ஒரு தம்பி இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் இன்னொரு தம்பி இருப்பது சமீபத்தில் தான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

நடிகர் தேனி முருகன் அவர்கள் சமீபத்தில் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரைப்பட அனுபவத்தையும், பாரதிராஜா பற்றியும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய பெயர் முருகன். சினிமா துறையில் பல முருகன்கள் இருந்ததால் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தேனி முருகன் என்று என் பெயரை நான் வைத்துக்கொண்டேன். உண்மையிலேயே பாரதிராஜா என்னுடைய அண்ணா. என்னுடைய அம்மாவும், பாரதிராஜா அம்மாவும் அக்கா தங்கைகள்.

இதையும் பாருங்க : ஓபன் ட்ரென்ச் கோட், டூ பீஸ் உடையில் சகல அழகையும் காட்டிய காலா பட நடிகை ராதிகா ஆப்தே.

Advertisement

அவர் எனக்கு பெரியம்மா பையன் அதாவது அண்ணா முறை. ஆனால், சினிமாத் துறையில் நாங்கள் அந்த உறவை பயன்படுத்திக் கொள்ள மாட்டோம். அவர் எப்போதும் என்னுடைய குரு. அந்த இடத்தில் வைத்து தான் நாங்கள் இருவரும் பழகிக் கொள்ளவும். முதலில் நான் உதவி இயக்குனராக தான் இருந்தேன். அதன் மூலமாக எனக்கு சின்ன சின்ன ரோல் கிடைக்கும். அதிலும் வடிவேலுடன் நிறைய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன்.

அதில் சாணைக்கு பிறந்த சோனா என்ற டயலாக் மக்கள் மத்தியில் என்னை மிகவும் பிரபலபடுத்தியது. வடிவேலு மாதிரி ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகரை தற்போது தமிழ் சினிமா உலகம் மிஸ் பண்ணுகிறது. அவர் கூடிய விரைவில் படங்களில் நடிக்கவேண்டும் அவர் மாதிரி யாராலும் நடிக்க முடியாது. நான் ஐயா, தாஜ்மஹால், பத்மினியும் பண்ணையாரும், பருத்திவீரன் போன்ற பல படங்களில் கிடைக்கும் சின்னச் சின்ன ரோலில் நடித்து வந்தேன். அதை தொடர்ந்து நான் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனாக்கானும் காலங்கள் தொடரில் பச்சைக்கு அப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன்.

Advertisement

தற்போது நான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் புலிக்குட்டிக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறேன். அதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று தன்னுடைய சினிமா பயணத்தை பகிர்ந்துகொண்டார். இதை பார்த்த பல பேர் நடிகர் தேனி முருகன் பாரதிராஜாவின் தம்பியா! என்று வியந்து போய் தங்களின் கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement
Advertisement