விஜயகாந்த் போன உடனே என் உடம்பும் போய்டுச்சு - கண் கலங்கியபடி நடிகர் தியாகு சொன்ன விஷயம்

By subhashini · 21/7/2025

மறைந்த நடிகர் விஜயகாந்த் பற்றி நடிகர் தியாகு எமோஷனலாக பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று கருதப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடைய நடிப்பிற்கு இன்றும் யாரும் நிகர் இல்லை என்று தான் சொல்லணும். அந்த அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். இதனால் இவரை நடிகர் திலகம் என்று பலரும் அழைக்கிறார்கள்.

இவர் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் இவர் தமிழ் மொழியில் மட்டும் 250 படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்திருக்கிறார். சிவாஜி என்பது நடிப்பு என்ற பெயரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் என்று கூறினால் அது மிகையாகாது.

சிவாஜி கணேசன் நினைவு தினம்:

மேலும், தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும், ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன். இந்த நிலையில் இன்று சிவாஜி கணேசனின் 24 வது நினைவு தினம். இதனை முன்னிட்டு சென்னையில் சிவாஜி கணேசனின் சிலைக்கு திரைப்பட பிரபலங்கள் பலருமே நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் தியாகுமே சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=I906h0OCdvw

தியாகு பேட்டி:

பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் தியாகு, சிவாஜி அப்பா எனக்கு ரொம்பவே வேண்டியவர். என் மீது அதிக பாசம் கொண்டவர். என்னுடைய திருமணத்துக்கு எல்லாம் அவர் வந்திருக்கிறார். என்னை எப்போதுமே கும்பகோணத்தான் என்று தான் சிவாஜி அழைப்பார். அவருடன் நான் சேர்ந்து மூன்று படம் நடித்திருக்கிறேன். அதோடு நான் அவருடைய தீவிர ரசிகன். வி.கே ராமசாமி இடம் சிவாஜி அப்பா, மின்சார சுடுகாட்டுக்கு 240 ரூபாய் தான்.

https://www.youtube.com/watch?v=gdur0r8zcoI

சிவாஜி கணேசன் பற்றி சொன்னது:

என்னை எப்படியாவது எரிச்சிடுங்கடா என்று சொல்லுவார். மின்சார சுடுகாட்டுக்கு ஊர்வலமாக போகும்போது நானும் விஜயகாந்த் தான் போனோம். அப்போது விஜயகாந்த் நானும் தவசி படம் பண்ணிட்டு இருந்தோம். அதற்கு முன்னாடி நாள் இரவு சிவாஜி அப்பா இறந்துவிட்டார் என்று விஜயகாந்த் தான் எனக்கு சொன்னார். அற்புதமான மனிதன் சிவாஜி. அவர் மாதிரி ஒரு நடிகர் பிறப்பது ரொம்பவே கஷ்டமான ஒன்று. சிவாஜி அப்பாவுடைய 24-வது நினைவு நாளில் அவரை நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது.

விஜயகாந்த் பற்றி சொன்னது:

அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இப்போது என்னுடைய உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், என்னுடைய உயிர் நண்பன் விஜயகாந்த் போனதிலிருந்து எனக்கு உடம்பு போய்விட்டது. கொரோனா எல்லோரையும் படாத பாடு படுத்திவிட்டது. விவேக் போய்விட்டான். அதிலிருந்து ஒரு பயம் வர ஆரம்பித்துவிட்டது. எனக்கு காலில் முறிவு ஏற்பட்டது. என்னுடைய பொண்ணு டாக்டராக இருப்பதால் தப்பித்தேன். அதிலிருந்து கவனமாக இருக்கிறேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full