தக் லைப் படம் விழா : எப்போ உங்க திருமணம் - திரிஷா சொன்ன பதில், கமல் கொடுத்த நெத்தியடி

By subhashini · 19/4/2025

தன்னுடைய திருமணம் பற்றி நடிகை திரிஷா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா‌. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுமார் 22 ஆண்டுகளுக்கு மேலாக டாப் ஹீரோயினாக வலம் வரும் இவர் இன்றும் ஹீரோயினாக நாயகிகளுக்கு போட்டியாக விளங்குகிறார். அந்த வகையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த குட் பேட் அக்லி என்ற படத்தில் திரிஷா நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார். கடைசியாக இவர் இயக்கிய மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது.

திரிஷா திரைப்பயணம்:

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூலை செய்து வருகிறது. இதை அடுத்து தற்போது திரிஷா அவர்கள் கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைப் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார்.

தக் லைஃப் படம்:

ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

http://youtube.com/watch?v=Hb-8_yTzVwI

தக் லைஃப் பட விழா:

தற்போது இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரோடாக்சன் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் ஏ ஆர் ரகுமான். மணிரத்தினம், கமல், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் திரிஷாவிடம் தொகுப்பாளர் திருமணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=rrBIx5AtXWY

திரிஷா திருமணம்:

அதற்கு திரிஷா, எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையில்லை. அது நடந்தாலும் ஓகே, நடக்கவில்லை என்றாலும் ஓகே என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார். உடனே கமலஹாசன், இவங்க ஓட்டு போடுவாங்களா, மாட்டாங்களா வந்தாலும் சரி என்கிறார்கள். ஓட்டு போடுபவர்கள் யாரும் அப்படி நினைக்காதீங்க. என்னிடம் எம்பி பிரிட்டாஸ், நீங்க பிராப்பர் பிராமணர். ராமரை வணங்கும் நீங்க எப்படி ரெண்டு கல்யாணம் பண்ணலாம்? என்று கேட்டார். நான் கடவுளை வணங்குவதில்லை என்பது வேறு விஷயம். ப்ராப்பர் குடும்பத்தில் வருவதற்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்னு எனக்கு தெரியவில்லை.
அதற்கு, நான் ராமர் இல்லை. ராமர் அப்பா வகையறா. இன்னும் 45 ஆயிரத்திற்கும் சொச்சம் கல்யாணம் பாக்கி இருக்கு என்று சொன்னதாக கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full