தலைவன் வடிவேலுவா இது - நீண்ட இடைவெளிக்கு பின் வெளியான புகைப்படம். எப்படி இருந்த மனுஷன்.

By Rajkumar · 13/2/2021

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் வடிவேலுக்கு தலைவலி ஏற்பட்து . வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்கள். இந்த படத்தையும் ஷங்கர் தான் தயாரித்து வந்தார்.

https://twitter.com/manobalam/status/1360393586177544193

ஆனால், வடிவேலு அவர்கள் நான் இந்த படத்தில் நடிக்கமாட்டேன். அப்படி நான் நடிக்க இருந்தால் பெரிய நடிகர்களின் பட்டாலும் இருக்கக்கூடாது மற்றும் எனது ஆடை வடிவமைப்பாளரை நான் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் பல விதிமுறைகளை விதித்தார். இதனால் ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூட சொல்லலாம், மேலும் இந்த படம் அப்படியே முடங்கி விட்டது. இதனால் வடிவேலு மீது பயங்கர கோபத்துடன் இருந்தார் சங்கர்.

இதையடுத்து படத்தில் தான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது.மேலும், அவரை யாரும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் வடிவேலு தற்போதும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வரும் ஒரு நபராக தான் இருந்து வருகிறார்.

https://twitter.com/Rajarajan988/status/1360404343686639620

இப்படி ஒரு நிலையில் நடிகர் வடிவேலுவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை நடிகர் மனோ பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மனோ பாலா, சந்தானா பாரதி, வடிவேலு, கங்கை அமரன் ஆகியோர் இருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலுவை பார்த்த ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், வடிவேலுவை மிஸ் செய்வதாகவும் பலரும் கமன்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full