தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். பத்தாண்டுகளுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருந்த வடிவேலு, அதன்பிறகான நிகழ்வுகளால் மனம் நொந்து போனார்.இவர் திமுகவுக்காக பிரசாரம் செய்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று விட்ட நிலையில், தொடர்ந்து வடிவேலுவை படங்களுக்குக் கமிட் செய்வதில் தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குநர்கள் தயங்கியதாலேயே நடிப்பிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலை வந்தது.

அதே போல வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்கள். இந்த படத்தையும் ஷங்கர் தான் தயாரித்து வந்தார்.இந்த படம் பிரச்சனை காரணமாக ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூட சொல்லலாம், மேலும் இந்த படம் அப்படியே முடங்கி விட்டது. இதையடுத்து படத்தில் தான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது.மேலும், அவரை யாரும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் வடிவேலு தற்போதும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வரும் ஒரு நபராக தான் இருந்து வருகிறார். சமீபத்தில் நண்பர்கள் நடத்திய கெட் டு கேதர் நிகழிச்சியில் கர்ணன் படத்தின் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலை பாடி உருகி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் வடிவேலுவை மீண்டும் நடிக்க அழைத்து வர இருக்கிறாராம் இயக்குநர் சுராஜ். இயக்குனர் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம் வடிவேலு. ‘தலைநகரம்’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயரான ‘நாய் சேகர்’ என்பதையே இப்படத்துக்கு டைட்டிலாக வைத்துள்ளனர். வடிவேலு நீண்ட காலத்துக்கு பிறகு, இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்

Advertisement
Advertisement