கைகொடுத்த சீரியல் இயக்குனர். மீண்டும் என்ட்ரி கொடுக்கப்போகும் வடிவேலு. இதோ செம ஹேப்பி நியூஸ்.

By Rajkumar · 10/3/2021

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். பத்தாண்டுகளுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருந்த வடிவேலு, அதன்பிறகான நிகழ்வுகளால் மனம் நொந்து போனார்.இவர் திமுகவுக்காக பிரசாரம் செய்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று விட்ட நிலையில், தொடர்ந்து வடிவேலுவை படங்களுக்குக் கமிட் செய்வதில் தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குநர்கள் தயங்கியதாலேயே நடிப்பிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலை வந்தது.

அதே போல வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்கள். இந்த படத்தையும் ஷங்கர் தான் தயாரித்து வந்தார்.இந்த படம் பிரச்சனை காரணமாக ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூட சொல்லலாம், மேலும் இந்த படம் அப்படியே முடங்கி விட்டது. இதையடுத்து படத்தில் தான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது.மேலும், அவரை யாரும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் வடிவேலு தற்போதும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வரும் ஒரு நபராக தான் இருந்து வருகிறார். சமீபத்தில் நண்பர்கள் நடத்திய கெட் டு கேதர் நிகழிச்சியில் கர்ணன் படத்தின் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடலை பாடி உருகி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் வடிவேலுவை மீண்டும் நடிக்க அழைத்து வர இருக்கிறார் சீரியல் இயக்குனர் திருமுருகன். சன் டிவியில் சீரியல் இயக்கிக் கொண்டிருந்த இயக்குநர் திருமுருகன் இயக்கிய முதல் திரைப்படமான பரத், கோபிகா நடித்த ‘எம்டன் மகன்’ படத்தில் வடிவேலு நடித்திருந்தார். அந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. அடுத்தப் படமான 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்திலும் வடிவேலு நடித்திருந்தார். தற்போது மீண்டும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கே படம் இயக்க கமிட் ஆகியிருக்கும் திருமுருகன் தன்னுடைய மூன்றாவது படத்திலும் வடிவேலுவை நடிக்க வைப்பதாகத் தெரிகிறது.

behindtalkies AMP · Quick view
View full