தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். பத்தாண்டுகளுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருந்த வடிவேலு, அதன்பிறகான நிகழ்வுகளால் மனம் நொந்து போனார்.இவர் திமுகவுக்காக பிரசாரம் செய்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று விட்ட நிலையில், தொடர்ந்து வடிவேலுவை படங்களுக்குக் கமிட் செய்வதில் தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குநர்கள் தயங்கியதாலேயே நடிப்பிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலை வந்தது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது.மேலும், அவரை யாரும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் வடிவேலு தற்போதும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வரும் ஒரு நபராக தான் இருந்து வருகிறார். சமீபத்தில் நண்பர்கள் நடத்திய கெட் டு கேதர் நிகழிச்சியில் கர்ணன் படத்தின் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலை பாடி உருகி இருந்தார்.

Advertisement

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வடிவேலு தன் மகன் சுப்ரமணிக்கு திருமணம் செய்து வைத்தார். அவரது சொந்த ஊரில் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் உறவினர்களை மட்டும் வைத்து திருமணம் நடத்தினார்.சுப்ரமணிக்கு பார்த்த பெண் பெயர் புவனேஸ்வரி.

இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊரைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா மரவேலை செய்யும் ஒரு கூலி தொழிலாளி. குடிசை வீட்டில் வசித்து வந்த அவருக்கு தன் மகன் மூலம் நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்திருக்கார் நல்ல உள்ளம் கொண்ட வடிவேலு.பழையதை எப்போது மறக்க கூடாது எனும் ஒரு பண்பு வடிவேலுவிடம் இன்றும் உள்ளது.

Advertisement
Advertisement