வானத்தை போல விஜயகாந்த் மாதிரி வாழ ஆசைப்பட்டேன், வீடு கூட இல்ல கஷ்டம் - மனம் திறந்த நடிகர் விதார்த்

By subhashini · 31/10/2024

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விதார்த். மைனா படத்தின் மூலம் தான் இவர் ஹீரோவாக களமிறங்கினார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், அந்த படத்திற்கு முன் இவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் திரையில் முதன் முதலில் தோன்றியது 2001-ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘மின்னலே’ படத்தில் தான். இதனைத் தொடர்ந்து ‘மௌனம் பேசியதே’, ‘ஸ்டுடண்ட் நம்பர் 1, லீ’, ‘சண்டக்கோழி’, ‘கொக்கி’, ‘திருப்பதி’, ‘பரட்டை என்கிற அழகு சுந்தரம்’, ‘திருவண்ணாமலை’ போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

அதோடு இவர் விஜய் நடித்த குருவி படத்தில் கூட ஒரு சிறு கதாபாதிபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் ‘மைனா’ படத்தில் தான் இவர் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின் இவர் குருசாமி, கொள்ளைக்காரன், ஜன்னல் ஓரம், வீரம், குற்றமே தண்டனை, முப்பரிமாணம், ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை, மகளிர் மட்டும், கொடிவீரன், இறுகப்பற்று போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகியிருந்த அஞ்சாமை படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

விதார்த் குறித்த தகவல்:

தற்போதும் இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இருந்தாலும், தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி கொண்டு இருக்கிறார் விதார்த். இதற்கிடையில் இவர் 2015 ஆம் ஆண்டு காயத்ரி தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து விதார்த் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர்,
முதலில் எனக்கு கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணமே கிடையாது. வானத்தைப்போல விஜயகாந்த் மாதிரி என்னுடைய தம்பிகளுக்கு கல்யாணம் செய்து அவர்களுடைய பிள்ளைகளை கொஞ்சி வளர்க்கணும் என்று தான் நினைத்தேன்.

https://www.youtube.com/shorts/I--TFGv9Z68

விதார்த் பேட்டி:

என்னுடைய தம்பிகளெல்லாம் சேர்ந்து, நீ கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் தான் நானும் ஒத்துக்கொண்டேன். பின் எனக்குப் பிடித்த மாதிரி பெண் இருக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போது என்னுடைய தம்பி உடைய பிரண்டு மூலமாக அறிமுகமானவர் தான் என்னுடைய மனைவி காயத்ரி. அவர்களை பற்றி சொன்னதால் நானும் சரி பார்க்கலாம் என்றிருந்தேன். ஆனால், அவர்களிடமிருந்து சரியான பதில் வரவில்லை. இதனால் நான் கோயம்புத்தூரில் வேறொரு பெண்ணை பார்ப்பதற்கு போயிருந்தேன்.

சினிமா வாழ்க்கை:

அப்போதுதான் என்னுடைய மனைவியிடம் இருந்து போன் வந்தது. நாங்கள் இருவருமே 10 நிமிடம் பேசினோம். உடனே சென்னைக்கு வந்து அவர்களை பார்த்தேன். ரெண்டு பேருக்குமே பிடித்து விட்டது. பின் இரண்டு வீட்டிலுமே பேசி கல்யாணம் செய்து கொண்டோம். எங்களுக்கு கல்யாணம் பேசி முடித்த நேரத்தில் குற்றமே தண்டனை என்ற படத்தில் நடித்து முடித்து இருந்தேன். அடுத்து ரிலீஸ் பண்ணனும், ஆறு மாதம் ரொம்ப பிரச்சினையாக இருந்தது. அந்த படத்தை கொண்டு போய் சேர்க்க ரொம்ப கஷ்டப்பட்டேன். மேலும், நாங்கள் கல்யாணம் பண்ண உடனே ரொம்ப கஷ்டப்பட்டோம். ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் எல்லாம் அட்வான்ஸ் தொகை கூட இல்ல, சம்பளமும் இல்லை.

https://www.youtube.com/watch?v=UJBQQpk9WVc

தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சொன்னது:

அதனால் நாங்க தனியா இருக்கணும் என்று முடிவு பண்ணி வந்தபோது எங்களுக்கு வீடு கூட இல்ல. ஆபீஸில் வந்து படுத்து இருந்தோம். காலையில் அசிஸ்டன்ட் டைரக்டர் வீட்டில் மனைவியை விட்டுட்டு போய் விடுவேன். கார கூட விற்று பைக்கில் தான் சுத்திட்டு இருந்தேன். நடிகர்களுக்கு வீடு தேடுவது ரொம்ப கஷ்டம். உங்க படம் நல்லா இருக்கு, இது பாப்பாவா என்று நல்லா பேசுவாங்க. ஆனா, நாம வீடுன்னு பேசும்போது மட்டும் வீட்டில் கேட்டு சொல்கிறோம் என்று சமாளிப்பாங்க. இந்த தெருவில் இந்த வீட்டை பார்க்கும்போது எல்லாம் இதை விற்றாலோ அல்லது வாடகைக்கு விட்டாலோ நாம வரணும்னு எல்லார்கிட்டயும் சொல்லிக் கொண்டே இருந்தேன். அந்த வீடு எங்களுக்கு சொந்தமாக கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று பல விஷயங்களை மனம் திறந்து கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full