சீக்கிரமே சென்னையை விட்டு போயிருவேன், இடம் பார்த்துட்டு இருக்கேன் - பிரஸ் மீட்டில் விஜய் ஆண்டனி சொன்னது

பிரஸ் மீட்டில் விஜய் ஆண்டனி சொன்னது

By subhashini · 6/6/2026

தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் இசையில் வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மார்கன் திரைப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்த படம் ‘சக்தி திருமகன்’. இந்த படத்தை விஜய் ஆண்டனியே நடித்தும் தயாரித்து இருந்தார். இந்த படத்தை அருண் பிரபு இயக்கி இருந்தார். இது விஜய் ஆண்டனியின் 25 வது படம். அரசியல் கதைகளத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது.

விஜய் ஆண்டனி குறித்த தகவல்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நூறு சாமி. இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஜூன் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

நூறு சாமி படம்:

இந்த நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, இந்த படத்தில் நான் விவசாயியாக நடித்திருக்கிறேன். எனக்கு ரொம்பவே பிடித்தது. ரொம்ப எளிமையான வாழ்க்கை தான். தொழில் காரணமாக தான் நான் சென்னையில் இருக்கிறேன். ஸ்ரீதர் வேம்பு சார் எப்படி தென்காசியில் போய் செட்டில் ஆனோ அதே மாதிரி நானும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பொள்ளாச்சி போன்ற இடங்களில் செட்டில் ஆகிவிடுவேன்.

பிரஸ் மீட்டில் விஜய் ஆண்டனி:

உண்மையிலேயே அதற்காக இடம் தேடிக் கொண்டிருக்கிறேன். கிராமத்து வாழ்க்கையை வாழவே நான் ரொம்பவே ஆசைப்படுகிறேன். கிராமத்தில் உள்ளவர்கள் நகரத்திற்கு வரலாம். அங்கு மால் இருக்கிறது என்றெல்லாம் நினைக்காதீர்கள். இங்கு ஒன்றுமே இல்லை. கிராமத்தில் தான் நல்ல காற்று, மக்கள் எல்லாருமே இருக்கிறார்கள். அங்கு பரபரப்பு இருக்காது. கிராமத்து மக்கள் வாழக்கூடிய ஒரு வாழ்க்கை நல்ல வாழ்க்கை என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full