தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது விஜய் மற்றும் அஜித் தான். இதில் விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சி உள்பட புதிதாக இணைந்த மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சென்னை பனையூரில் இருக்கும் அலுவலகத்தில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில், மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள். கடன் வாங்காமல் உதவிகளை செய்யுங்கள். வழக்கம் போல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும் என்று மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை வழங்கினார் என்றும் கூறப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறி இருப்பதாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி மிகவும் வைரலாக பரவியது. அதுமட்டுமல்லாது இந்திய தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை பதிவு செய்ததாகவும் தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியானதை அடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி கூட இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கருத்து கேட்டபோது விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை இந்தியா ஒரு ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று கூறியிருந்தார்.

Advertisement

இதனால் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி விட்டார் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தனர் இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இன்று என் தந்தை திரு எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்து உள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப் படுத்தாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

மேலும் எனது ரசிகர்கள் எனது தந்தை கட்சி ஆரம்பித்தார் என்பதற்காக தங்களை கட்சியில் இணைத்துக் கொள்ளவும் கட்சிப் பணியாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விளம்பரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisement
Advertisement