ரெண்டாவது தடவ நான் பழனி மலைக்கு மேல போய் தரிசிக்கில- முருக கடவுள் குறித்து விஜய் சேதுபதி. வீடியோ இதோ.

By Rajkumar · 19/7/2020

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரை அதிகம் மக்கள் செல்வன் என்று தான் அழைக்கிறார்கள். விஜய் சேதுபதியின் நடிப்பும், பேச்சும் இயல்பாகவே இருக்கும். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே வேற லெவல் தெறிக்க விட்டது. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.தற்போது இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

https://twitter.com/VijaySethuOffl/status/1227496726451257347

கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திலும் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய்க்கு வருமான வரி சோதனை நடைபெற்ற போது ட்விட்டரில் ஒரு பதிவு வைரலானது. அதில், கிறிஸ்துவக்குழுக்கள் விஜய் மூலமாக தமிழகத்தில் காலூன்ற நினைப்பதாகவும், இதை ஜேப்பியாரின் மகள் ரெஜினா இயக்கமாக முன்னெடுத்திருப்பதாகவும் இதில் நடிகர் விஜய் சேதுபதி, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டதாக குறிப்பிடபட்டிருந்தது.

இதையும் பாருங்க : முகவரி படத்தில் 4 நாட்கள் நடித்த விஜய் பட நடிகை - பாதியில் தூக்கிய இயக்குனர். காரணம் இது தானாம்.

இந்த பதிவிற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, போயி வேற வேல இருந்தா பாருங்கடா என்று பதில் அளித்திருந்தார். விஜய் சேதுபதியின் இந்த ட்வீட் வைரலாக பேசப்பட்டு வந்தது. இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கருப்பர் கூட்டம் விவகாரம் பூதகரமாக வெடித்துள்ள நிலையில் விஜய் சேதுபதி தமிழ் கடவுள் முருகர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/Cinemavikatan/videos/318259172893701

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதியிடம், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா, உங்கள் அலுவலகத்தில் கூட முருகர் படம் இருப்பதை பார்த்தேன் என்று கேள்வி கேட்கப்பட அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, நான் 2018-ல் ஜூங்கா ஷூட்டிங்கின் போது பழனிக்கு போயிருந்தேன். பின்னர் 2019-ல் மீண்டும் போயிருந்தேன். அப்போது மேலே போகாமல் கிழ இருந்தே தரிசனம் செய்தேன். காரணம் 2018 ஆம் நான் மேல போனதால் ரசிகர்கள் கூட்டம் கூடி பக்தர்களுக்கு ஒரு இடைஞ்சலாக மாறி விட்டது அதனால் நான் கிழ இருந்தே வேண்டிகிட்டேன் என்று கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full