அப்போ இது அவர் இல்லையா? எம்.குமரன் படத்தில் தான் நடித்த காட்சி குறித்து சொன்ன விஜய் சேதுபதி
ஜெயம் ரவி குறித்து விஜய் சேதுபதி பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஜெயம் ரவி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. அந்த வகையில் இவர் நடித்த படத்தில் ஒன்றான இறைவன் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, நான் முதலில் 250 ரூபாய் சம்பளம் வாங்கினேன்.
அதற்கு பிறகு 400 ரூபாய் சம்பளம் எம். குமரன் படத்தில் தான் கிடைத்தது. அந்த படத்தில் ஜிம் பாயாக நடிக்க கேட்டார்கள். அது என்ன என்று கூட தெரியாது. ஆனால், நம்மளுக்கு ஒரு ரோல் இருக்கிறது என்று நினைத்து போனேன். நதியா மேடம், எனக்கு ஒரு மகன் இருக்கிறான், பாக்ஸர் என்று சொல்லும் போது அந்த காட்சியில் நான் வருவேன். நான் முதல் முதலாக பார்த்த ஹீரோ ஜெயம் ரவி தான். அவருடைய படத்தின் விழாவில் நான் கலந்து கொள்வது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
விஜய் சேதுபதி பேட்டி:
அதை தாண்டி நாங்கள் இருவரும் நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறோம். போகன் படத்தில் கூட நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்த சமயத்தில் எனக்கு கால் சீட் கிடைக்காததால் நடிக்க முடியாமல் போனது. சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நாங்கள் நடிப்போம். உண்மையில் ஜெயம் ரவி சுவிட்டானா நபர், ஹான்ட்சம் நபர் என்று பேசியிருந்தார். இவரை தொடர்ந்து ஜெயம் ரவி, விஜய் சேதுபதி பேசின பல விஷயங்களை நான் கேட்கவில்லை.
ஜெயம் ரவி பற்றி சொன்னது:
அவர் பேசும் போது நான் நிறைய சிரித்துக் கொண்டுதான் இருந்தேன். அவர் பார்த்த முதல் ஹீரோ நான் தான் என்று சொன்னார். நான் இவர் சொன்னதற்காக சொல்லவில்லை. உண்மையிலேயே நான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று நினைக்கும் போது விஜய் சேதுபதியை வைத்து தான் இயக்க வேண்டும் என்று நினைத்தேன். எல்லா வேலையும் அவரே செய்து விடுவார். நமக்கு அவ்வளவு பெரிய கஷ்டமும் இருக்காது.
ஜெயம் ரவி பேட்டி:
மக்களிடமும் அந்த படத்தை வெற்றியடைய செய்து விடுவார். நாம் சேர்ந்து நடிப்போமோ என்று தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக உங்களை வைத்து ஒரு படம் பண்ணுவேன். உங்களுடைய கால் சீட் கிடைக்க வேண்டும். ரொம்ப நாட்கள் எடுத்துக்கொள்ள மாட்டேன். சீக்கிரமாகவே முடித்து விடுவேன். அதே போல் அவர் ஒரு நல்ல மனிதர். நிறைய பேருக்கு இன்ஸ்பிரேஷன் என்று சொல்லலாம்.
விஜய் சேதுபதி பற்றி சொன்ன விஷயம்:
ஒரு பேட்டியில் கூட அவரிடம், நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, என்னைத்தான் என்று சொன்னார். உடனே நான் எழுந்து நின்று கைத்தட்டினேன். அந்தளவிற்கு அவர் தன்னம்பிக்கையுடன் போராடி வருகிறார். அவருடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறார் என்று பகிர்ந்திருக்கிறார்