மேஜர் முகுந்த் மகளை அன்றே நேரில் சந்தித்த விஜய்- ஒரு சுவாரசியமான காரணம் இதோ

By subhashini · 24/10/2024

மேஜர் முகுந்த் வரதராஜன் மகளை நடிகர் விஜய் சந்தித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அமரன்’.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த போராட்ட சம்பவங்கள், வீர செயல்கள், குடும்பம், மனைவி, குழந்தை ஆகியவற்றை வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அமரன் படம்:

இதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் தான் நடந்து கொண்டிருக்கிறது. அதோடு பட பிரமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, கமலஹாசன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் படம் குறித்தும், தங்கள் அனுபவம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

அர்ஷயா செய்தது:

இந்த நிலையில் மேஜர் முகுந்த் மகளை விஜய் நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஷயா என்ற மகள் இருக்கிறார். விஜய்யின் நடிப்பில் வெளிவந்த தலைவா படத்தில் இடம் பெற்ற தமிழ் பசங்க என்ற பாடலை அர்ஷயா ரேடியோவில் கேட்டு இருந்தார்.

அர்ஷயா உடன் விஜய்:

பின் அர்ஷயா திடீரென்று எழுந்து நின்று உற்சாகமாக நடனமாடி பாடி சந்தோஷப்பட்டார். இந்த விஷயம் அறிந்த விஜய் அவரை சந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்குப்பின் விஜய்யின் உதவியாளர் முகுந்த் மகளை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்குப்பின் வடபழனியில் விஜய் அவர்கள் முகுந்த் மகள் அர்ஷயாவை சந்தித்து அவர் உடன் கொஞ்ச நேரம் செலவழித்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். தற்போது இந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

விஜய் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. கடைசியாக விஜய் நடித்திருந்த கோட் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருந்தது. இதை தொடர்ந்து இவர் தளபதி 69 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதான் இவருடைய கடைசி படம். இதை அடுத்து இவர் முழு நேர அரசியலில் குதிக்கிறார். சமீபத்தில் தான் இவர் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிவித்திருந்தார். கூடிய விரைவிலேயே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கான வேலைகளை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மும்முரமாக செய்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full