விஜய் சேதுபதி மகனின் 'பீனிக்ஸ்' படத்தை பார்த்த விஜய் - என்ன சொல்லி இருக்காரு பாருங்க

By subhashini · 4/7/2025

விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்து இருக்கும் பீனிக்ஸ் படத்தை தளபதி விஜய் பார்த்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்.

இவருடைய கருத்துக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகிறது. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான ‘மகாராஜா’ படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளையும் செய்திருக்கிறது.

விஜய் சேதுபதி திரைப்பயணம்:

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான ஏஸ் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் மிஸ்கின் இயக்கும் ட்ரெயின், வேறு சில படங்களிலும் கமிட்டாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, தற்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய அப்பாவின் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

சூர்யா சேதுபதி குறித்த தகவல்:

அந்த வகையில் சூர்யா முதன் முதலில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தார். அதனை அடுத்து சிந்துபாத் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விடுதலை 2 படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தனியாக படத்தில் நடித்து இருக்கிறார்.

பீனிக்ஸ் படம்:

இவர் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘Pheonix வீழான்’ என்ற ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு சாம்.சி எஸ் இசையமைக்கிறார். இந்த படம் ஜூலை நான்காம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி எமோஷனலாக பல விஷயங்களை பேசி இருந்தார்.

விஜய் சொன்ன விசயம்:

இப்படி இருக்கும் நிலையில் பீனிக்ஸ் படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டிருக்கிறது. இதை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு விஜய் சேதுபதி மகன் சூர்யாவை பாராட்டி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் அவர்கள் பீனிக்ஸ் பட குழுவினருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது

behindtalkies AMP · Quick view
View full