வெறும் 22,000கிமீ தான் ஓட்டம், Due Tax இல்லை - விற்பனைக்கு வந்த விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை

By subhashini · 3/8/2024

நடிகர் விஜய் உடைய ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகர், நடிகைகள் சொகுசு கார்களை தான் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான பிரபலங்கள் Audi, Bmw, ரோல்ஸ் ராய்ஸ் என்று சொகுசு கார்களை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்து இருக்கும் பிரபலம் விஜய்.

இவரிடத்தில் ஏகப்பட்ட கார் கலெக்ஷன் இருக்கிறது. அதில் இவரிடம் விலை அதிகமான காரில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார். இதை கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து விஜய் இறக்குமதி செய்திருந்தார். ஒரு சொகுசு கார் வாங்கினால் இறக்குமதி வரி மட்டும் 137 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும். அதோடு இந்த காருக்கு இறக்குமதி வரி, நுழைவு வரி கட்ட வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால், விஜய் இறக்குமதி வரி மட்டும் கட்டி இருந்தார்.

ரோல்ஸ் ராய்ஸ் கார் சர்ச்சை:

பின் அந்த காருக்கு நுழைவு வரி ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது தனி நீதிபதி, சினிமா நடிகர்கள் உரிய வரியை செலுத்த வேண்டும். வரி வருமானம் என்பது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய ஒன்று. திரையில் மட்டும் சமூக நீதிக்காக பாடுபடுவது போல் நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், வரிவிலக்கு கூறுவதை ஏற்க முடியாது. ரீல் நடிகர்களாக இல்லாமல் ரியலாக இருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்து பேசி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் இருந்தார்.

காரை விற்கும் விஜய்:

இதனால் மனவேதனை அடைந்த விஜய் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நீதிபதி கூறிய கருத்தை நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இப்படி இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. பின் கடைசியில் இந்த வழக்கில் விஜய்க்கு வெற்றி கிடைத்திருந்தது. இப்படி விஜய்க்கும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்குமே செட்டே ஆகவில்லை, ஏழாம் பொருத்தமாக இருந்தது. இதனால் விஜய்க்கும் கெட்ட பெயர் வந்தது. இந்நிலையில் தற்போது அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை செகனண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

கார் குறித்த விளம்பரம்:

விஜய் அவர்கள் Empire Autos என்ற ப்ரீமியம் கார் டீலர்ஷிப்பில் தான் அந்த காரை விற்க முடிவெடுத்து இருக்கிறார். இதனால் சோசியல் மீடியாவில் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் காருடைய படத்தை பதிவிட்டு விற்பனைக்கு விடப்பட்டதாக செய்தி வாயிலாக வருகிறது. மேலும், இந்த கார் தொடர்பாக டீலர்கள், காரில் எங்கேயுமே டென்ட் விழவில்லை. சின்ன கீறல் கூட இல்லை. கார் நன்றாக ஓடும் கண்டிஷனில் இருக்கிறது. சர்வீஸ் ஹிஸ்டரி எல்லாம் பக்காவாக இருக்கிறது. காருக்கு வெள்ள பாதிப்பு எதுவும் கிடையாது.

காரின் விலை:

காரில் உள்ள எலக்ட்ரானிக்கல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் பக்காவாக வேலை செய்கின்றது என்று கூறி இருக்கிறார்கள். இந்த கார் உடைய விலை 2.6 கோடி. 2012-ல் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட இந்த காருடைய ஓடோ மீட்டர் ரீடிங் 22,000 கி.மீ. இந்த காருக்கு 2.6 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் போதும் அதற்கு மேல் ஒரு பைசா கூட தேவை இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். தற்போது இந்த கார் தொடர்பான விவரம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த காரை விஜய் எதற்காக விற்கிறார் என்ற விபரம் தான் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full