விக்ரமின் தம்பியை பார்த்துள்ளீர்களா.! அவரும் இப்போ சினிமாவில் நடிக்க போகிறார்.!
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகர் விக்ரம். டெடிகேஷன் என்றால் அது கமலுக்கு பின் விக்ரம் என்று கூறலாம். மேலும், இவர் நவீன கால சிவாஜி கணேசன் என்று கூறினாலும் அதற்கு மிகையில்லை. அதற்கு காரணம் ஒவ்வொரு படத்திற்கும் இவர்போடும் கெட்டப் தான்.
விக்ரம் ஆரம்ப காலத்தில் பல ஹீரோக்களுக்கு டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் இரண்டாம் நிலை கதாநாயகனாக அறிமுகமானார். இவரது தந்தையும் ஒரு நடிகர் தான், ஆனால் அவரால் ஒரு வெற்றிகரமான நடிகராக வளம் வர முடியவில்லை.
இதையும் பாருங்க : அழகி பட்டம் பறிக்கப்பட்டது உண்மையா.! மீரா மிதுன் சொன்ன விளக்கம்.!
இதனால் விக்ரமிற்கு சிறு வயது முதலே சினிமா மீது ஒரு ஏற்பட்டது. சிறு வயதில் பல்வேறு ட்ராமா மற்றும் சினிமா ட்ராமாக்களில் பங்குபெற்றார் விக்ரம்.ஆனால், இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம் தான்.
விக்ரம் பற்றி இத்தனை விடயங்கள் தெரிந்தாலும் அவருக்கு ஒரு சகோதரர் இருப்பது பலரும் அறிந்திடாத ஒன்று. அவருடடைய பெயர் அரவிந்த் ஜான் விக்டர். தற்போது அவரும் சினிமாவில் கால்பதிக்க இருக்கிறார். அரவிந்த் ஜான், கல்யாணம் என்ற படத்தில் வில்லனாக அறிமுகமாக இருக்கிறார்.