சினிமா ஒரு பிசினஸ், ஆனால் என்னை பொறுத்தவரை - நடிகர் விக்ரம் பிரபு ஓபன் டாக்

By subhashini · 20/12/2025

தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிறை. இந்த படத்தை சுரேஷ் ராஜகுமாரி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் எல்கே அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை லலித் குமார் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் அவர்களுடைய கதையை வைத்து தான் இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார்.

இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று இருந்தது. இதில் கலந்துகொண்ட நடிகர் விக்ரம் பிரபு, எனக்கு சினிமா என்பது ஒரு கலை(ஆர்ட்). ஆனால், பொருளாதார என்ற ஒரு சிக்கலால் நிறைய படங்களை எடுக்க முடியாமல்
போனது. அதனால் ஒரு நல்ல சப்ஜெக்ட் எடுத்துட்டு வரணும். அதற்காக ஒரு குழுவாக என்ன வேலை எல்லாம் செய்ய முடியுமோ என்று முயற்சிக்கிறேன்.

சிறை படம்:

என்னுடைய சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக நான் எப்போதும் யோசிக்கவில்லை. சினிமா ஒரு பிசினஸ் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால், அந்த பிசினஸ்குள் நாம் போயிட்டா கலையை மறந்து விடுவோம். அதற்காக நம்மை நம்பி வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் கதையை கொடுத்தால் பிசினஸ் தானாகவே நடக்கும். அதில் ஆர்ட் தானாகவே வளரும். அதனால் நான் இப்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஆர்ட் தான். அதற்கு பிறகு தான் பிசினஸ்.

விக்ரம் பிரபு பேட்டி:

இதை நான் கடைப்பிடிக்கிறேன். டாணாக்காரன் படத்தின் கதாபாத்திரம் அறிவிற்கும், சிறை கதாபாத்திரத்தில் இருக்கும் கதிரவனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அறிவு காவல்துறையில் பயிற்சி எடுக்க போன இடத்தில் நடக்கும் சம்பவம். சிறை படம் 12 வருடங்களாக காவல்துறையில் வேலை செய்யும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு இருக்கும் பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்டது. எனக்கு எல்லா வருடமும் சந்தோஷமான வருடம்தான்.

https://www.youtube.com/watch?v=7VyHz_iDqNc

சினிமா பற்றி சொன்னது:

ஒவ்வொரு வருடமும் இந்த வருடத்தில் நாம் என்ன தவறுகளை செய்தோம். இதிலிருந்து என்ன பாடங்களை கற்றுக் கொண்டோம் என்றெல்லாம் யோசிப்பேன். இதுவரைக்கும் வந்த வருடங்கள் எல்லாமே நல்லதும் நடந்திருக்கிறது, கத்துக்க வேண்டிய இடங்களும் வந்திருக்கிறது. அடுத்தடுத்து நல்லதை செய்து கொண்டிருந்தால் நல்லதே வரும் என்ற நம்பிக்கையில் தான் கடந்து கொண்டே இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full