படத்துக்கு முதல்ல வச்ச பேரு இது தான், ஆனால் - நிகழ்ச்சியில் 'வீர தீர சூரன்' விக்ரம் பகிர்ந்த தகவல்

By subhashini · 25/3/2025

வீர தீர சூரன் படத்தின் டைட்டில் குறித்து நடிகர் விக்ரம் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா திரையுலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக நடிகர் விக்ரம் அவர்கள் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்கிரோன் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

வீர தீர சூரன்:

இதை அடுத்து விக்ரம் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வரிசையில் தற்போது விக்ரம் அவர்கள் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை முன்னணி நட்சத்திர இயக்குனரான எஸ். யூ. அருண்குமார் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து, எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

மேலும், இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் இந்த மாதமே வருகிற 27ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் வீர தீர சூரன் படம் தொடர்பாக பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரம், இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம்.

விக்ரம் பேட்டி:

உணர்ச்சிபூர்வமான படத்தை கமர்சியலாக கொடுக்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக நினைத்தேன். அப்படி ஒரு கதைக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன். அந்த கதை தான் இந்த வீர தீர சூரன் படத்தினுடைய கதை. அருண்குமார் அவர்கள் சித்தா- சேதுபதி படத்தையும் சேர்த்து இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார். இந்த படம் ரொம்ப raw and raustic படமாக மட்டும் இல்லாமல் ஒரு மாசான படமாகவும் இருக்கும். இது ரியலாகவும் இருக்கும். இதைப்பற்றி நான் பில்டப் எல்லாம் செய்யவில்லை. இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

https://www.dailymotion.com/video/x9gmpi0

படத்தின் டைட்டில்:

இந்த படத்தில் பாடலாக இருந்தாலும், சண்டைக் காட்சியாக இருந்தாலும் ரொம்ப ராவாக உருவாக்கி இருக்கிறோம். உங்கள் அனைவருக்குமே இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். அதேபோல் சினிமா இலக்கணத்தை இந்த படம் மீறி இருக்கு. படத்தில் என்னுடைய ஓப்பனிங் வித்தியாசமாக இருக்கும். எங்களின் புது முயற்சிக்கு உங்களுடைய ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறேன். அதேபோல் இந்த படத்திற்கு நாங்கள் முதன்முதலில் 'காளி' என்றுதான் டைட்டில் வைக்க பார்த்தோம். ஆனால், ஏற்கனவே விஜய் ஆண்டனி நடிப்பில் காளி என்ற படம் வெளியாகியிருந்தது. அதனால் தான் இந்த டைட்டில் வைத்தால் பிரச்சனை வரும் என்று வைக்கவில்லை. வீர தீர சூரன் என்று பெயர் வைத்தோம். காளி எனும் கதாபாத்திரத்திற்கு இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full