சினிமாவை பொறுத்த வரை சாக்லெட் பாய் என்ற பெயரை எடுத்துவிட்டால் பின்னர் மாஸ் ஹீரோவாக மாறுவது மிக கடினம். தமிழ் சினிமாவில் பிரசாந்த் துவங்கி மாதவன் வரை எத்தனையோ பேர் ஆரம்பத்தில் சாக்லேட் பாய் முத்திரையை பெற்றதால் அவரக்ளின் மாஸ் பக்கத்தை காட்ட பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஆனால், ஒரு சிலர் சாக்லேட் பாய் முத்திரையோடே சென்று விடுகின்றனர். அந்த வகையில் உன்னாலே உன்னாலே வினய்யும் ஒருவர்.

இவர், அம்மாயி, உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், ஆள் அம்பு சேனை, இருவர் உள்ளம், ஆயிரத்தில் இருவர், துப்பறிவாலன், சேர்ந்து போலாமா, அரண்மனை, என்றென்றும் புன்னகை,, ஒன்பதில் குரு, மிரட்டல், மோதி விளையாடு போன்ற பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார். ஆனால், இவரது உன்னாலே உன்னாலே, ஜெயங்கொண்டான் ஆகிய இரண்டு படங்களை தவிர வேறு எந்த படமும் ஓடவில்லை.

Advertisement

மேலும், இடையில் இவர் படு குண்டாக மாறிவிட்டார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் துவங்கியது. இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு ‘துப்பறிவாளன்’ படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் மிஸ்கின். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆனாலும், அந்த படத்திற்கு பின்னரும் இவருக்கு சரியான ஹீரோ வாய்ப்பு அமையவில்லை. துப்பறிவாளன் படத்திற்கு பின் இவர் ஆயிரத்தில் இருவர், நேத்ரா என்று இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார். இப்படி ஒரு நிலையில் உடல் எடையை குறைத்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்குள் படு ஸ்மார்ட்டாக மாறியுள்ளார். மேலும், இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும் நடித்து வருகிறார்.

Advertisement
Advertisement