இத்தனை பெண்களுடன் உடல் உறவு வைத்து இருக்கிறேன், திமிரு பட நடிகரின் திமிரான பேச்சால் எழுந்த சர்ச்சை (அப்போ அந்த நடிகை சொன்ன Metoo புகார் உண்மையோ ? )
'நான் பல பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறேன்' என்று திமிரு படத்தின் நடிகர் விநாயகன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் விநாயகன். இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த திமிரு என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். அதேபோல் இவர் மலையாளத் திரையுலகிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர் ஒருத்தி என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
நவ்யா நாயரும் இந்த படத்தில் நடித்து உள்ளார். மேலும், ஒருத்தி என்ற மலையாளத் திரைப்படம் கடந்த வாரம் தான் வெளியானது. இந்த படத்தை ஒட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விநாயகன் கலந்து கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் முன்னாள் மாடல் அழகி ஒருவர் உங்கள் மீது வைத்த குற்றச்சாட்டிற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விநாயகன் அளித்த பதில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விநாயகன் கூறியது, மீடு பற்றி பலரும் பேசி வருகிறார்கள். மீடுன்னா என்ன? எனக்கு அதை பற்றி தெரியாது. திருமணத்துக்கு முன் யாரும் பாலியல் உறவில் ஈடுபடவில்லையா?
பேட்டியில் விநாயகன் பேசிய சர்ச்சை கருத்து:
இங்குள்ள யாராவது திருமணத்துக்கு முன் செக்ஸில் ஈடுபட்டிருக்கிறீர்களா? ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொள்வது தான் மீடு வா? ஒரு பெண்ணை பார்க்கும்போது அந்த பெண்ணை எனக்கு பிடித்திருந்தால் நான் அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று என்னுடன் உடல் உறவு வைத்து கொள்ள விருப்பமா? என்று கேட்பேன். அவர் விருப்பம் தெரிவித்தார் அவருடன் உடலுறவு வைத்துக் கொள்வேன். விருப்பம் இல்லை என்றால் அங்கிருந்து சென்று விடுவேன். அப்படித்தான் நான் இதுவரை 10 பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறேன். அதோடு உங்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று நான் கேட்ட 10 பெண்களில் அவளும் ஒருத்தி எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
விநாயகன் பேசிய சர்ச்சைக்கு எழும் பதிவு:
இப்படி விநாயகன் பேசி இருக்கும் பேச்சு திரையுலக பிரபலங்களுக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் மட்டும் இல்லாமல் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண்ணின் போராட்டத்தை மையமாகக் கொண்ட `ஒருத்தி' திரைப்படத்தில் பெண்களையும், 'மீ டூ' குற்றச்சாட்டுகளையும் அவமானப்படுத்தும் விதமாக நடிகர் விநாயகன் பேசியதற்கு அவர் மீது மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
விநாயகன் மீது கண்டனம் தெரிவிக்கும் மக்கள்:
மேலும், நடிகர் விநாயகன் பேசியிருப்பது குறித்து பெண்கள் நல ஆர்வலர்களிடை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி எழுத்தாளர் டாக்டர் சாரதாகுட்டி கூறியது, பிரபல நடிகர் பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சினிமாவின் புரொமோஷன் நிகழ்ச்சியில் அகங்காரத்துடனும், அற்பத்தனத்துடனும் தனது மனதில் உள்ள அழுக்குகளை வெளியே கொட்டியிருக்கிறார். இது மிகவும் கேவலமான ஒன்று எனக் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகர் விநாயகனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
விநாயகன் மீது மீ டூ புகார் :
ஏற்கனவே, நடிகர் விநாயகன் மீது கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் மாடல் அழகியுமான மிருதுளா தேவி என்பவர் மீ டூ புகார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையானது. கடந்த 2019 ஆம் ஆண்டு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மிருதுளா தேவியை அழைத்த போது ஆபாசமாகப் பேசியதாக விநாயகன் மீது புகார் கொடுத்தார். தன்னை மட்டுமல்லாது தன் தாயையும் அழைத்தார். விருப்பும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொன்னதாக விநாயகன் மீது அவர் கல்பட்டா காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதை தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.