எளிமையாக நிச்சயதார்த்த நடக்க இது தான் காரணம் - நடிகர் விஷால் தந்தை பளீச் பதில்

By subhashini · 29/8/2025

விஷால்-தன்ஷிகா நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் சாதனையும் செய்திருக்கிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் பொது செயலாளராகவும் இருக்கிறார்.

கடைசியாக விஷால்- சுந்தர்.சி கூட்டணியில் வெளியாகி இருந்த படம் தான் மதகஜராஜா. தற்போது நடிகர் விஷால் அவர்கள் பிஸியாக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. 40 வயதானாலும் முரட்டு சிங்கிளாகவே விஷால் இருக்கிறார். அதோடு நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் விஷால் என்று கூறியிருந்தார்.

விஷால் குறித்த தகவல்:

பின் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் விஷால், நடிகர் சங்க கட்டிடம் தான் என்னுடைய கனவு. அதை கட்டி முடித்த பின்பு திருமணம் செய்வேன் என்று அறிவித்தேன். அதை ஒரு சவாலாகவும் எடுத்துக் கொண்டுதான் செயல்பட்டேன். நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். அவர் சாய் தன்ஷிகா தான் என்று கூறி இருந்தார். பின் இவர்களின் திருமண வேலைகளும் நடந்து கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இன்று நடிகை தன்சிகாவிற்கும் விஷாலுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.

விஷால்-சாய் தன்ஷிகா:

இது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இது தொடர்பாக விஷாலின் தந்தை ஜி.கே ரெட்டி அளித்த பேட்டியில், ஒவ்வொரு முறையும் விஷால் திருமணம் குறித்து வெளியில் சொல்லும்போது தடங்கல் ஏற்படும். அதனால் தான் இந்த முறை திருமண நிச்சயதார்த்தத்தை யாருக்கும் சொல்லாமல் சிம்பிளாக நடத்தினோம். தான் வாங்கிய புது பிளாட்டில் நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் தான் அங்கு நிச்சயதார்த்தம் நடந்தது. எங்கள் வீட்டில் எல்லோருக்குமே காதல் திருமணம் தான்.

விஷால்-சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்:

காதல் திருமணம் என்றால் பெற்றோருக்கு பிரச்சனை இல்லை. நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடிந்ததும் விஷால் கல்யாணம் இரண்டு மாதங்களில் நடந்து விடும் என்று கூறி இருக்கிறார். அதற்குப்பின் விஷால், எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது. அனைவரின் ஆசிர்வாதங்களும் வாழ்த்துகளும் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. அன்றைக்கு தான் திருமணம் என்று திட்டமிட்டு இருந்தோம். கடவுளாக பார்த்து அனுப்பிய என் வாழ்க்கை துணைவி தான் தன்ஷிகா. கூடிய சீக்கிரத்தில் திருமணம் நடக்கும் என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full