ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாததற்க்கு நடிகர் சங்கம் என்ன செய்யும்? நடிகர் விஷால் பளிச் பதில்

By subhashini · 23/2/2026

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால் படம் வெளியாக தாமதமானது. பின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நீதிமன்றம் சான்றிதழ் கொடுக்க சொல்லி தீர்ப்பு கொடுத்தும் மறு ஆய்வுக்கு மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
பொங்கலுக்கும் படம் வெளியாகாததால் ரசிகர்கள் எல்லோருமே மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

விஷால் பேட்டி:

ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை.இந்நிலையில் இந்த படம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் விஷால் பேசியது, ஜனநாயகன்படம் சென்சார் பிரச்சனை கோர்ட்டில் நடக்கிறது. அதற்கு நடிகர் சங்கம் எப்படி குரல் கொடுக்க முடியும்? தயாரிப்பாளர்களின் பிரச்சனைக்கு அனைத்து தயாரிப்பாளர்களும் சென்சார் போர்டு அலுவலகம் முன்பு சென்று நின்றார்கள் என்றால் என்ன ஆகும் தெரியுமா? ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் எங்களை அணுகவில்லை.

https://www.youtube.com/watch?v=YUX8OB243Wg

ஜனநாயகன் சர்ச்சை:

இந்த சங்கம் வலிமையாக பெரிய சக்தியாக இருந்தால் தமிழ் சினிமா மிகப்பெரிய இடத்திற்கு போக கூடிய விஷயமாக தயாரிப்பாளர் சங்கம் இருக்கும். இப்போது இருக்கிற தயாரிப்பாளர்கள், நலிவடைந்த தயாரிப்பாளர்கள் என எல்லோருமே மீண்டும் படம் எடுக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் செழிப்பாக இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை. வெற்றி பெறக்கூடிய அணியினருக்கு என்னுடைய கோரிக்கை, நாம் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக இருந்தோம் என்றால் யாரும் நம்மை உடைக்க முடியாது.

தயாரிப்பாளர் சங்கம் பற்றி சொன்னது:

சின்ன திரைப்படங்களும் வாழவேண்டும். தோற்பவர்களையும் சேர்த்து எல்லோரும் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும். நான் ஓட்டு போட்டதே தமிழ் சினிமா நல்லா இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் தேர்தலில் நிற்காததற்கான காரணம் நடிகர் சங்க கட்டிடம் முடிவிற்கு வந்துவிட்டது. அதன் பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன். நான் தேர்தலில் போட்டியிடும் போது யாரும் இருக்கவில்லை. தற்போது சீனியர் தயாரிப்பாளர்கள், அறிவாளிகள் நிற்கிறார்கள். அவர்கள் நிற்கட்டும் என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full