விஜய் முதல்ல பிரஸை மீட் பண்ணட்டும், அப்புறம் - விமர்சனங்களுக்கு நடிகர் விஷால் கொடுத்த பதிலடி
விஜய் அரசியல் பற்றி நடிகர் விஷால் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் சாதனையும் செய்திருக்கிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் பொது செயலாளராகவும் இருக்கிறார்.
அதோடு தமிழ் சினிமாவில் ‘புரட்சித் தளபதி’ என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். தற்போது விஷால் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக விஷால் மற்றும் சுந்தர்.சி கூட்டணியில் வெளியாகி இருந்த படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், பாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.
விஷால் திரைப்பயணம்:
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி இருந்தது. சோசியல் மீடியாவிலும் இப்படம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தது.
https://www.youtube.com/watch?v=DQGgcNQXfcc
விஷால் அளித்த பேட்டி:
மேலும், மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் இப்படம் பெற்றது. இதை அடுத்து இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. தற்போது நடிகர் விஷால் அவர்கள் பிஸியாக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விஷால் இடம் மும்மொழிக் கொள்கை குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், மனிதனுடைய வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் திணிக்க முடியாது.
விஜய் குறித்த கேள்வி:
அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி எந்த ஒரு திணிப்பும் வெற்றி அடையாது. அதேபோல் இங்கு பல பள்ளிகளில் ஏற்கனவே மூன்று மொழிகளை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி என்றால் அவை அனைத்தையும் நிறுத்த வேண்டும். பசங்க என்ன படிக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் தான் முடிவு எடுக்கிறார்கள். எந்த மொழியில் படித்தால் பலன் இருக்கும் என்பதையும் யோசித்து தான் பெற்றோர்கள் முடிவெடுக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
விஷால் கொடுத்த பதில்:
அதை அடுத்து அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நீங்கள் போட்டியிடுவீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு விஷால், எல்லாம் இறைவன் கையில்தான் இருக்கிறது என்றார். உடனே விஜயின் அரசியல் பார்வை குறித்து கேட்டிருக்கிறார்கள். அதற்கு விஷால், விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும். அதன் பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள். அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தால் அனைத்து கேள்விகளுக்குமே விடை கிடைத்துவிடும். சமூக சேவை செய்யும் எண்ணம் இருக்கும் அனைவருமே அரசியலுக்குள் வரலாம் என்று கூறியிருக்கிறார். தற்போது விஷாலின் இந்த பதில் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.