விஷாலை காதலித்து நிச்சயம் முடித்த நிலையில் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டுள்ள நடிகை.

By Rajkumar · 1/10/2021

தமிழில் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார்.விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 16-ந்தேதி சனிக்கிழமை, ஐதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினுரில் நடைபெற்றது. மேலும், இவர்களது திருமணம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது வரை இவர்கள் திருமணம் நடைவில்லை பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் விஷாலின் வருங்கால மனைவி அனிஷா, விஷலுடன் இருந்த புகைப்படத்தையும், நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த அணைத்து புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்துநீக்கியும் இருந்தார். எனவே, விஷாலின் திருமணம் நின்று விட்டதாக கூறப்பட்டது.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்னாள் ஐஸ்வர்யாவிற்கு காதல் திருமணம் - வருங்கால கணவருடன் அவரே வெளியிட்ட புகைப்படம்.

இந்த நிலையில் விஷால் திருமணம் நின்றுவிட்டதாக நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அதில், பத்திரிகையாளர் விஷால் கிட்ட எப்போ கல்யாணம் என்று கேட்ட போது, லட்சுமி மாதிரி ஒரு பொண்ணு வரும் என்று சொன்னார். பின்னர் வரலக்ஷ்மியிடம் காதலில் இருந்து வந்தார். பின்னர் நான் சிகப்பு மனிதன் படத்தின் போது லட்சுமி மேனனுடன் பயங்கர நெருக்கமாக நடித்தார்.

அப்போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி உண்டாகி காதல் ஏற்பட்டது. பின்னர் தான் அனிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் லட்சுமி மேனன் விஷால் வீடியோ பார்த்துவிட்டு அந்த திருமணத்தை நிறுத்திவிட்டார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் விஷால் திருமணம் நின்று விட்டதாகவும் அனிஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்துவிட்டது என்றும் புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார் விஷால் தந்தை.

மேலும், விஷால் ஒரு பொண்ணை காதலித்தது உண்மை தான். அந்தப் பெண் வேறொருவரை திருமணம் செய்துவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். அது கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. அது எல்லாம் காலப்போக்கில் மறைந்து விட்டது. சோசியல் மீடியாவில் பலவிதமாக பேசுவார்கள் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி இருந்தார். விஷாலை காதலித்து நிச்சயதார்த்தம் ஆன நிலையில் அமெரிக்க மாப்பிளையை திருமணம் செய்து இருக்கிறார் அனிஷா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full