மேடையிலேயே மயங்கி விழுந்த நடிகர் விஷால், காரணம் என்ன? விஷால் மேலாளர் கொடுத்த விளக்கம் - முழு விவரம் இதோ

By subhashini · 12/5/2025

மேடையிலேயே நடிகர் விஷால் மயங்கி விழுந்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை ஒட்டி திருநங்கைகளுக்கான மிஸ் திருநங்கை அழகி போட்டி நடந்திருந்தது. இதில் சென்னை திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது மேடையில் பேசிய நடிகர் விஷால் திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். உடனே அங்கிருந்த விஷாலினுடைய ஆதரவாளர்கள் அவரை மேடையில் இருந்து அழைத்துச் சென்றார்கள். சிறிது நேரத்திலேயே விஷால் உடல்நலம் தேறி பழைய நிலைக்கு திரும்பினார். இருந்தாலும் விஷாலை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அங்கு பரிசோதித்த பிறகு விஷால் பூரணமாக குணமாகி சென்னைக்கு திரும்பி இருக்கிறார்.

மேடையில் மயங்கி விழுந்த விஷால்:

இந்த சம்பவம் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை பார்த்த பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு? அவருடைய உடலில் என்ன பிரச்சனை? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள். மேலும், விஷாலின் உடல்நிலை குறித்து அவருடைய மேலாளர் ஹரி, விஷாலின் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் மதிய உணவு சாப்பிடாமல் ஜூஸ் மட்டுமே குடித்திருந்தார். அதன் காரணமாக தான் விஷால் சோர்வாகி மயங்கி விழுந்தார். தற்போது விஷால் நன்றாக இருக்கிறார். இனி உணவு சாப்பிடாமல் இருக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=g902qoHU2D4

விஷால் உடல்நிலை:

தேவை இல்லாமல் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இதற்கு முன்பே
கடந்த ஜனவரி மாதம் விஷால் நடிப்பில் உருவாகி இருந்த மதகஜராஜா படத்தினுடைய ப்ரமோஷனுக்கு படக் குழுவினர் சென்றிருந்தார்கள். அங்கு மேடையில் பேசும் போது விஷால் கை, கால் நடுங்கி இருந்தது. இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. அவருக்கு வைரல் காய்ச்சல் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக மருத்துவமனையும் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். பின் விஷால் பூரண குணமாகி அது தொடர்பாக பேட்டி எல்லாம் கொடுத்து இருந்தார்.

விஷால் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும், வசூல் சாதனையும் செய்திருக்கிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் பொது செயலாளராகவும் இருக்கிறார். அதோடு தமிழ் சினிமாவில் ‘புரட்சித் தளபதி’ என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். தற்போது விஷால் நடிகர் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

விஷால் படம்:

கடைசியாக விஷால்-சந்தானம் கூட்டணியில் வெளியாகி இருந்த படம் தான் மதகஜராஜா. இந்த படம் பல வருடங்களுக்கு பின் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி இருந்தது. எதிர்பார்த்ததை இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் செய்து இருந்தது. தற்போது நடிகர் விஷால் அவர்கள் பிஸியாக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full