சின்ன படங்கள் பத்தி பேசினா வில்லனாக பார்த்தாங்க, ஆனா இன்னிக்கி தமிழ் சினிமா - விஷால் ஆதங்கம்

By subhashini · 30/1/2025

சிறிய பட்ஜெட் படங்கள் தொடர்பாக நடிகர் விஷால் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் வெளியாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், சூட், பாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி இருந்தது. சோசியல் மீடியாவிலும் இப்படம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தது. மேலும், மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் இப்படம் பெற்றுள்ளது.

விஷால் பேட்டி:

இதை அடுத்து இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் சுந்தர்.சி, விஷால், விஜய் ஆண்டனி உட்பட பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள். மேலும், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சென்னையில் உள்ள கோயில்களுக்கு சென்று விஷால் தரிசனம் செய்திருக்கிறார். அதுவும் சைக்கிள் ஓட்டிக் கொண்டு எல்லாம் கோவிலுக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் விஷால், சைக்கிள் ஓட்டுவது நல்ல விஷயம்தான். டிராபிக்கில் எல்லாம் புகுந்து சாமி பார்க்க போனேன்.

கோயில் செல்ல காரணம்:

இப்போதும் சாமி பார்க்க தான் போகிறேன். மதகதராஜா படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 12 வருஷங்கள் கழித்து ஒரு படம் இவ்வளவு பெரும் வெற்றி பெற்று இருக்கிறது என்றால் அதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். அதேபோல் சின்ன பட்ஜெட் படங்களை பற்றி பேசும்போது என்னை பெரிய வில்லனாக தான் பார்க்கிறார்கள். நான் திரும்பவும் சொல்கிறேன், ஒரு கோடியில் இருந்து 4 கோடி வரை படம் எடுக்கணும் என்று இருந்தால் இந்த வருஷமும் அடுத்த வருஷமும் வங்கியில் வைப்புத் தொகையாக போடுங்கள். இல்லை என்றால் நிலத்தை வாங்குங்கள்.

சின்ன பட்ஜெட் படங்கள்:

ரொம்ப மோசமான நிலையில் தான் தமிழ் திரை உலகம் இருக்கிறது. நான் இதை ஓப்பனாக சொல்கிறேன். மற்றவர்கள் சொல்ல மாட்டார்கள். நல்ல பாதையில் கொண்டு போகும் நபர்களை நம்பி படமெடுக்கலாம். ஆனால், காசு இருக்கிறவர்கள் எல்லோரும் படம் எடுக்கலாம் என்றால் விஜயமல்லையா, அம்பானி எல்லாம் கூட படம் எடுக்கலாமே? அவர்கள் ஏன் படம் எடுக்கவில்லை? அவர்களுக்கே நன்றாக தமிழ் சினிமா நிலைமை புரிகிறது. சினிமா துறையை பொறுத்தவரை எப்பவுமே லாபம், பலன் கிடைக்காது. முக்கியமாக சின்ன படங்களுக்கு எல்லாம் கேள்வி குறிதான்.

View this post on Instagram

A post shared by Amn tv (@amntv_tamilnadu)

தமிழ் சினிமா நிலைமை:

ஓடிடியாக இருக்கட்டும், சாட்டிலைட் ஆக இருக்கட்டும் சின்ன படங்கள் விற்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இதை நான் உணர்ந்து தான் சொல்கிறேன். போன வாரம் ஆறு படங்கள் வந்தது. அதில் சில படங்கள் நன்றாக இருந்தது. ஆனால், ஆடியன்ஸ் தியேட்டருக்கு வரவே இல்லை. அதற்கு நாம் ஆடியன்ஸை குறை சொல்ல முடியாது. இதை சரி செய்யணும் என்றால் ப்ரொடியூசர் கவுன்சில் கண்டிப்பாக சில முடிவுகள் எடுக்கணும். அதை அவர்கள் எடுத்தால் தான் சின்ன படங்களுக்கு உணர்வு, உற்சாகம் கொடுக்கும்.
சின்ன படங்கள் தான் பெப்சி தொழிலாளர்களுக்கு வாய்ப்பு தருகிறது. நாங்கள் எல்லாம் வருஷத்துக்கு மூன்று, இரண்டு படங்கள் தான் நடிக்கிறோம். சின்ன படங்களை நம்பி 18 ஆயிரம் பேர் நம்பி இருக்கிறார்கள் என்று பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full