மோதிரத்தை மாற்றி நிச்சயம் செய்து கொண்ட விஷ்ணு விஷால் - இரண்டாம் திருமணத்திற்கு தயார்.

By Rajkumar · 7/9/2020

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

https://www.instagram.com/p/CE0wefNDN_C/

பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தற்போது தன் மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் நடிகர் விஷ்ணு. இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தன்னுடைய காதல் மனைவியை பிரிந்து, மதுவுக்கு அடிமையானது, அதிலிருந்து மீண்டு வந்தது பற்றி இரண்டு பக்க கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிகை அமாலபாலை திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகின. ஆனால், அது எல்லாம் உண்மை இல்லை, வதந்தி என்று மறுத்தார் நடிகர் விஷ்ணு விஷால். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில மாதங்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் இருந்து வந்தார். இதனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக கூட கூறப்பட்டது

https://www.instagram.com/p/CE0ucg3gVpe/

விஷ்ணு விஷால் காதலியான ஜுவாலா, விஷ்ணு விஷால் மற்றும் தனுக்கு இருக்கும் உறவு குறித்து பிரபல பத்திரிகைக்கு பேட்டிகொடுத்து இருந்தார் . அதில், ஆம் நாங்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம் முன்பே சொன்னது போல இதில் மறைக்க எதுவுமே கிடையாது விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் திருமண தேதி முடிவு அல்லது இதுகுறித்து ஏற்பாடுகள் நடந்தாலும் நாங்கள் விரைவில் அறிவிப்போம் என்று கூறி இருந்தார்.

ஆனால், ஜுவாலா விஷயத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து மௌனம் சாதித்து வந்தார். இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 7) பிறந்தநாளில் விஷ்னு ஜுவாலாவை திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்துள்ளார். ஜுவாலாவின் பிறந்த நாளன்று இருவரும் மோதிரத்தை மாற்றி தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று உள்ளனர். விரைவில் இவர்கள் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full