திருமண நாளிலே மீண்டும் அப்பா ஆன விஷ்ணு விஷால் - சந்தோஷத்தில் மொத்த குடும்பம், குவியும் வாழ்த்துகள்

By subhashini · 22/4/2025

திருமண நாளன்று நடிகர் விஷ்ணு விஷாலிற்கு மீண்டும் குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

முதல் படத்திலேயே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பலேபாண்டியா, குள்ளநரிக்கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும், சமீப காலமாக விஷ்ணு விஷால் அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷால் திரைப்பயணம்:

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் FIR ஆகிய படங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நடித்தார். அது மட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். ஆனால், இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

விஷ்ணு விஷால் குறித்த தகவல்:

இது மட்டுமில்லாமல் இன்னும் சில படங்களில் விஷ்ணு கமிட் ஆகியிருக்கிறார். அதில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மோகன்தாஸ். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகன் ஆரியன் பெயரிலும் ஒரு படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இடம் பொருள் ஏவல் என்ற படத்திலும் விஷ்ணு நடித்திருக்கிறார்.

விஷ்ணு திருமணம்:

இதனிடையே விஷ்ணு விஷால் – ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பின் விஷ்ணு அவர்கள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாவை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும், விஷ்ணு விஷால் தன்னுடைய மகன் ஆரியனை கவனித்து கொள்கிறார்.

விஷ்ணு குழந்தை:

அதேபோல் ஜுவாலாவும் ஆரியனை ஏற்றுக்கொண்டார். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் விஷ்ணு விஷால் தந்தையாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விஷ்ணு விஷால்- ஜுவாலாவுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. மேலும், திருமண நாளிலேயே விஷ்ணு விஷால்- ஜுவாலாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த சந்தோஷமான செய்தியை விஷ்ணு விஷால் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full