15 வருஷத்துக்கு முன்னாடி இந்த இடத்துல நான் கீழே இருந்தேன், ஆனால் - விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா எமோஷனல்
ஓ எந்தன் பேபி பட விழாவில் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பலேபாண்டியா, குள்ளநரிக்கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
மேலும், சமீப காலமாக விஷ்ணு விஷால் அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் FIR ஆகிய படங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இது மட்டுமில்லாமல் இன்னும் சில படங்களில் விஷ்ணு கமிட் ஆகியிருக்கிறார். அதில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மோகன்தாஸ்.
விஷ்ணு விஷால் திரைப்பயணம்:
அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகன் ஆரியன் பெயரிலும் ஒரு படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இடம் பொருள் ஏவல் என்ற படத்திலும் விஷ்ணு நடித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, தற்போது நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா, நடிப்பில் உருவாகி இருக்கப்படும் ஓ எந்தன் பேபி. இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். இந்த படத்தை நடிகர் கிருஷ்ணா தான் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருந்தது.
ஓ எந்தன் பேபி:
இதில் படக்குழுவினருடன் நடிகர் கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் உட்பட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழாவில் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா பேசியது, எனக்கு இந்த தருணம் ரொம்பவே முக்கியமானது. இதற்காகத்தான் நான் பல வருடங்கள் காத்திருந்தேன். 15 வருடத்திற்கு முன்பு இதே இடத்தில் நான் வெண்ணிலா கபடி குழு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தேன்.
https://www.youtube.com/watch?v=pOxw49S2yi8
விழாவில் ருத்ரா பேசியது:
அப்போது நான் கீழே உட்கார்ந்து இருந்தேன். இப்போது 15 வருடம் கழித்து என்னுடைய அண்ணன் தயாரிப்பாளராக இங்கே உட்கார்ந்து இருக்கிறார், நான் நடிகராக மேடையில் இருக்கிறேன். சினிமா தான் என்னுடைய முதல் நண்பன். ஆசை ஆசையாக இந்த பயணத்தை தொடங்கும் போது எனக்கு முருகதாஸ் சாரிடம் பணிபுரியும் வேலை வாய்ப்பு வந்தது. அவரிடம் ஒன்றரை வருடங்கள் வேலை செய்தேன். அதற்கு பிறகு தான் இயக்கத்தில் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். இன்னும் கற்கவும் ஆசைப்படுகிறேன். இந்த நேரத்தில் தான் அண்ணன் என்னிடம், அவருடைய தயாரிப்பில் கொஞ்ச நாள் வேலை செய்ய சொன்னார்.
படம் பற்றி சொன்னது:
அப்போதுதான் இந்த படத்தினுடைய கதை வந்தது. இந்த படத்தின் 2 வருடங்களில் நான் பல கஷ்டங்களை சந்தித்தேன். அதோடு என்னுடைய அப்பாவும், அண்ணனுமே பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்று சொன்னால் அதற்கு காரணம் இயக்குனர் கிருஷ்ணா தான். அவ்வளவு பொறுமையான மனிதர். நான் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்லுவார் என்று கூறியிருக்கிறார்.