நான் ரஜினியை கிண்டல் பண்ணேனா? நடிகர் விஷ்ணு விஷால் ஆதங்கம்
நான் ரஜினியை கிண்டல் பண்ணேனா? நடிகர் விஷ்ணு விஷால் ஆதங்கம்
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும், சமீப காலமாக விஷ்ணு விஷால் அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் FIR ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து இருக்கிறார்கள். தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படம் ஜூலை 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க விஷ்ணு விஷால், தலைவரைப் பற்றி சொல்லக்கூடாது.
விஷ்ணு விஷால் சர்ச்சை:
தலைவரையும் மைக் புடிச்சுட்டு நான் விஜய்க்கு எதிரானவன் இல்லை என்று சொல்ற நிலைமைக்கு இன்னைக்கு இருக்கு. அப்படிப்பட்ட சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தலைவரே நாலு நாள் அமைதியாக இருந்தால் அவரை பற்றி தப்பு தப்பா விஷயத்தை சோசியல் மீடியாவில் பேசுகிறார்கள். அவரே வழியில்லாமல் நான் இதெல்லாம் பண்ணவில்லை என்று சொல்ற அளவுக்கு நம்ம நிலைமை ஆகிவிட்டது. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசியிருந்ததற்கு நெகடிவ் கமெண்ட்கள் வந்திருக்கிறது.
விஷ்ணு விஷால் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் விஷ்ணு விஷால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதை நான் எடுத்துக்காட்டாக தான் குறிப்பிட்டு சொன்னேன். ஆனால், அதை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். நான் யாரையும் குறிப்பிட்டு கருத்துக்கள் சொல்லவில்லை. யாருக்கு எதிராகவும் ஆதரவாகவும் என் கருத்தை நான் வைக்கவில்லை. சூப்பர் ஸ்டாரே அவர் பேசியதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய தேவை வந்திருக்கிறது. அதுதான் வருத்தமாக இருக்கிறது. அந்த சூழலை தான் சமூக வலைத்தளம் உண்டாக்கி இருக்கிறது என்று சொன்னேன். யார் முதலில் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்களோ அதை உண்மையாக்கி விடுகிறார்கள்.
சர்ச்சைகளுக்கு விளக்கம்:
சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட எங்களுக்கும் உரிமை இருக்கிறது. நடிகர்கள் பேசும் கருத்துக்களை மட்டும் ஏன் விமர்சனம் ஆகிறது? என்று புரியவில்லை. எங்களுக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சமூக வலைதளத்தில் அன்பு அதிகமாக இருக்கும் போது அங்கு வெருப்பும் இருக்கும். கெட்ட வார்த்தை எல்லாம் பேசும் போது தான் வேதனை அளிக்கிறது. எல்லோரும் ஒருநாள் சாகத்தான் போகிறோம். என் நோய் கொரோனாவுக்கு பிறகு தான் அதிகரித்தது. மருந்துகள் எடுத்தால் பக்க விளைவுகள் வருகிறது. அதை நிறுத்திய உடன் புத்துணர்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்