எனக்கு எவ்வளவு பேர் பணம் கொடுக்கன்னும் தெரியுமா?லிஸ்ட் தரட்டுமா? - மேடையில் யோகி பாபு ஆவேசம்

By subhashini · 9/5/2025

தன்னைக் குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து நடிகர் யோகி பாபு கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களின் பட்டியலில் யோகி பாபு பெயர் தான் முதல் இடத்தில் இருக்கு. இவர் ரஜினி, அஜித், விஜய் என்று பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் யோகி பாபு அவர்கள் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் ‘போட்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், யோகி பாபு அவர்கள் வானவன், ஜோரா கைய தட்டுங்க போன்ற பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். தற்போது சசிகுமார் நடிப்பில் வெளியாகிருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யோபி பாபு நடித்திருக்கிறார்.

யோகிபாபு குறித்த தகவல்:

இதை அடுத்து தற்போது யோகி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கஜானா. இந்த படத்தில் வேதிகா, இனிகோ பிரபாகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கத்தில் பேண்டஸி அட்வென்சராக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகிற 18-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனால் கடந்த வாரம் இந்த படத்தினுடைய ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய தயாரிப்பாளர் ராஜா, இங்கு யோகி பாபு வந்திருக்கிறாரா? அவர் வரவில்லை. அப்போ அவருக்கு 7 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்று அர்த்தம். ஒரு படத்தினுடைய பிரமோஷனுக்கு வருவதற்கு பணத்தை கொடுத்தால் தான் வருவேன் என்று நடிகர்கள் செய்கிறார்கள்.

யோகிபாபு விமர்சனம்:

ஒரு படத்தின் வெளியீடு என்பது ஒரு நடிகருக்கு குழந்தை பிறப்பது போல. அந்த குழந்தையை வளர்க்க வேண்டியது நடிகருடைய பொறுப்பு தான். நடிகர் யோகி பாபு இசை வெளியீட்டு விழாவுக்கு 7 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்று வரவில்லை. இது ரொம்ப கேவலமான செயல். நீங்கள் நடிகனாக இருக்கவே லாயக்கி இல்லை என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக யோகி பாபு அளித்திருக்கும் பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரோஜா கைய தட்டுங்க. இந்த படம் வருகிற 16-ம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=4nentnpTE9I

யோகிபாபு பேட்டி:

இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் விழா நடைபெற்று இருந்தது. இதில் கலந்துகொண்ட யோகி பாபு, 15 வருடத்திற்கு முன்பு நான் வினி சாரினுடைய தயாரிப்பில் தீக்குளிக்கும் பச்சை மரம் என்ற படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுத்தார். அதற்குப் பிறகு ஆறு வருடங்களாக எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. திடீரென்று ஒரு நாள் அவர் என்னை அழைத்து சொன்ன படம் தான் இது. இதில் எனக்கு சம்பளம் எவ்வளவு என்று கூட எனக்கு தெரியாது. அதை நான் முடிவும் செய்யவில்லை. அதைக் கேட்டால் தான் இங்கு எதிரியாக்குகிறார்கள். என்னிடம் அசிஸ்டெண்டாக வேலை செய்த தம்பி ஒருவர், ஹீரோவாக படம் நடிப்பதாக சொன்னார்.

https://www.youtube.com/watch?v=9gJj_Cs44wc

சர்ச்சைகளுக்கு பதிலடி:

நானுமே அவருக்கு வாழ்த்து சொன்னேன். உடனே அவர், இரண்டு நாட்கள் என்னை நடிக்க கேட்டார். நானும் ஒத்துக் கொண்டேன். அந்த படத்துக்கு தான் நான் 7 லட்சம், 8 லட்சம் கேட்டேன் என்று சொல்கிறார்கள். எனக்கு எவ்வளவு பேர் பணம் கொடுக்க வேண்டும் தெரியுமா? பட்டியலை நான் கொடுக்கட்டுமா? உங்களால் வாங்கி தர முடியுமா? தயவு செய்து தவறாக பேசாதீர்கள். பேசுபவர்கள் பேசட்டும். கடவுள் பார்த்துக் கொள்வார் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full