என்னுடைய ஸ்கூல் லைஃப்பை படமெடுக்கணும், நீங்க தான் மனசு வைக்கணும் - யோகிபாபு சொன்ன விஷயம்
யோபாபுவின் நீண்ட நாள் ஆசை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களின் பட்டியலில் யோகி பாபு பெயர் தான் முதல் இடத்தில் இருக்கும். இவர் ரஜினி, அஜித், விஜய் என பல தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த ‘மண்டேலா’ படம் பல விருதுகளைப் பெற்று இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சமீபத்தில் யோகி பாபு ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் ‘போட்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
யோகிபாபு குறித்த தகவல்:
இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், யோகி பாபு அவர்கள் வானவன், ஜோரா கைய தட்டுங்க போன்ற பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். தற்போது இவர் ஹீரோவாக மட்டும் இல்லாமல் காமெடி ரோலிலும் கலக்கி வருகிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஸ்கூல்'.
https://www.youtube.com/watch?v=aucydIqMiSI
ஸ்கூல் படம்:
இந்த படத்தை இயக்குனர் ஆர்.கே வித்யாதரன் இயக்கியிருக்கிறார். இவரே இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் பூமிகா சாவ்லா, கே. எஸ். ரவிக்குமார், நிழல்கள் ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் யோகி பாபு:
இதில் பேசிய யோகி பாபு, எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இந்த ஸ்கூல் படத்திற்கு இயக்குனர் என்னை முதலில் கூப்பிடும் போது பியூன் கதாபாத்திரம் என்று தான் சொன்னார். வாத்தியார் கதாபாத்திரத்திற்கு ஆள் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் என்னை வாத்தியார் ஆக்கிவிட்டார். நான் படித்ததெல்லாம் அரசு பள்ளியில் தான். நான் படித்த ஸ்கூல் கதையை படமாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன்.
ஸ்கூல் படம் குறித்து சொன்னது:
வித்யாதரன் சார் மனது வைத்தால் கண்டிப்பாக அதை படமாக செய்துவிடலாம். தாமு அண்ணன் பார்த்து தான் நானெல்லாம் நடிக்கவே வந்தேன். அவரோடு நடிக்க ஆசை. அண்ணா, நாம் மீண்டும் நடிக்கலாம். இளையராஜா சார் என்றுமே அவர்தான் ராஜா. அவர் அருமையான இசையை தந்திருக்கிறார். அவர் இசையில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. படம் நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள் என்று கூறியிருக்கிறார்.