நடிகர் சங்கம் கட்டிட விழா: எனக்கு திருமணம் ஆக 9 வருடங்கள் ஆகிவிட்டது - விஷால் சொன்ன விஷயம்
நடிகர் சங்க கட்டிடம் பற்றி விஷால் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெப்சி அமைப்பு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொண்டாடி இருந்தார்கள். இதில் நடிகர் சங்கத்தின் செயலாளரும் நடிகருமான விஷால் கலந்து கொண்டிருந்தார். அப்போது விழாவில் பேசிய விஷால்,
எனக்கு ரொம்ப பிடித்த தலைவர் ஆர் கே செல்வமணி சார். அவரிடம் உதவி அலுவலக பணி புரிய வேண்டும் என்று நான் ரொம்ப ஆசைப்பட்டேன்.
இருவரும் ஒரு பொறுப்பில் வந்து சந்திப்போம் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. ஒரு சங்கம் நடத்துவது கடினமாக இருக்கிறது என்றால் இவர் 24 சங்கங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால் இவருக்கு ஒரு சிலையே வைக்க வேண்டும். எனக்கு ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்த பெப்சி தலைவர் என்றால் அது ஆர்கே செல்வமணி சார். அடுத்த பெப்சி மீட்டிங் நடிகர் சங்க கட்டிடத்தில் நடக்க வேண்டும்.
விஷால் கட்டட திப்பு விழா:
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப்பணிகள் ஒன்பது வருடங்களுக்கு பிறகு கிட்டத்தட்ட கஷ்டங்களை தாண்டி கட்டப்பட்டு விட்டது. இன்னும் ஒரு நாலு மாதங்களில் கட்டிட வேலை முடிந்துவிடும் என்று நான் நினைக்கிறேன். கட்டிட திறப்பு விழாவிற்கு அனைவரும் பட்டுப்புடவையுடன், வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு வர வேண்டும். அனைவரையும் தனிப்பட்ட முறையில் நான் நிச்சயமாக அழைப்பேன். இப்போது கட்டப்பட்டுள்ள கட்டிடம் என்பது உங்களுக்கான கட்டணம்.
https://www.youtube.com/watch?v=Q1Y1THTTi_c
நடிகர் சங்க கட்டணம்:
இது நடிகர் சங்க கட்டணம் மட்டும் இல்லை. மொத்த சினிமா உருவாக்கப்பட்ட கட்டடம், பெரிய கட்டிடம்.
அதனால் அனைவருமே வருகை தர வேண்டும். பெரியவர்கள் சிரித்த முகத்துடன் வரவேண்டும், வாசலில் நின்று கொண்டே இருப்பேன். கட்டிடத்துக்கான திறப்பு விழாவை வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். முதலில் கட்டிடத்திறப்பு விழா நடைபெறும். அதற்குப் பிறகுதான் என்னுடைய திருமணம் நடக்கும்.
திருமணம் பற்றி சொன்னது:
கட்டட விழா நடந்து முடிந்ததால்தான் என்னுடைய திருமணம் நடைபெறும் என தெரியாமல் வார்த்தையை விட்டுட்டேன். அதற்கு ஒன்பது வருடங்கள் மேலாகிவிட்டது. ஒரு வழியாக கட்டிடமும் வந்துவிட்டது என்று பேசி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் சாதனையும் செய்திருக்கிறது.
விஷால் குறித்த தகவல்:
மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் பொது செயலாளராகவும் இருக்கிறார்.
அதோடு தமிழ் சினிமாவில் ‘புரட்சித் தளபதி’ என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். தற்போது விஷால் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக விஷால்-சந்தானம் கூட்டணியில் வெளியாகி இருந்த படம் தான் மதகஜராஜா. அது மட்டும் இல்லாமல் இந்த படம் பல வருடங்களுக்கு பின் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி இருந்தது. தற்போது நடிகர் விஷால் அவர்கள் பிஸியாக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.