நடிகர் சங்க திறப்பு விழாவுக்கு அவங்க இல்லாதது ரொம்ப ரொம்ப வருத்தம் - நடிகர் கார்த்தி எமோஷனல்

By subhashini · 15/7/2025

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவிற்கு விஷால், கார்த்தி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பழம்பெரும் நடிகையாக இருந்தவர் சரோஜாதேவி. இவர் கன்னடத்தை சேர்ந்தவர். இருந்தாலுமே இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருந்தார். இவரை எல்லோரும் கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று தான் அழைப்பார்கள்.

அவரின் நடை, உடை, பேச்சு எல்லாம் ரசிகர்கள் மத்தியில் என்றும் நீங்கா இருக்கு. இவர் 1955 ஆம் ஆண்டு தன்னுடைய 17 வயதில் கன்னட மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக, இவர் தமிழில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்திருந்தார்.

சரோஜா தேவி குறித்த தகவல்:

சினிமாவில் இவர் ஆற்றிய பங்கிற்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் எல்லாம் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் இவருக்கு கொடுத்திருந்தார்கள்.
அதற்குப் பின் இவர் 2019 ஆம் ஆண்டு வரை படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வந்தார்.
பின் வயது மூப்பின் காரணமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கிடையே இவர் ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்திருந்தார்.

சரோஜாதேவி இறப்பு:

இவருமே 1986 ஆம் ஆண்டிலேயே உடல்நல குறைவால் இறந்துவிட்டார். இருந்தாலுமே சரோஜாதேவி மன தைரியத்துடன் போராடி தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று நடிகை சரோஜாதேவி வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். இவருக்கு தற்போது 87 வயது. பெங்களூரில் தான் இவர் இறந்திருக்கிறார். இவருடைய மறைவு தென்னிந்திய சினிமா உலகில் பெரும் இழப்பை கொடுத்திருக்கிறது. திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

விஷால் பேட்டி:

மேலும், இவர் சினிமா மட்டுமில்லாமல் பொது சேவையையுமே செய்து இருக்கிறார். அந்த வகையில் இவருடைய கண்களும் தானம் செய்யப்பட்டிருக்கிறது. இன்று காலை 11:30 மணிக்கு இவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவருடைய உடலுக்காக நடிகர்கள் விஷால், கார்த்தி, அர்ஜுன் உட்பட பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷால், சரோஜாதேவி அம்மா அம்மாவின் இறப்பு தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் இந்திய திரை உலகிற்கே பேரிழப்பு.

https://www.youtube.com/watch?v=zab4bVRbZec

கார்த்தி பேட்டி:

அவருடன் அமர்ந்து நிறைய விஷயங்கள் பேசிருக்கேன். அவருக்கு இணையாக யாருமே இருக்க முடியாது. கண்களால் பேசக்கூடிய ஒரு நடிகை. சரோஜா தேவி அம்மாவினுடைய கண்கள் பொக்கிஷம். அந்த கண்கள் யாருக்குப் போய் சேர போகிறது என்பதை பார்க்க ரொம்பவே ஆசையாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இவரை அடுத்து பேசிய கார்த்தி, பெரிய ஆளுமை கொண்ட நபர் சரோஜாதேவி அம்மா. 50 வருடங்களுக்கு மேல் நடிகையாக இருந்திருக்கிறார். நடிகர் சங்கத்தில் நாங்கள் இருப்பதால் மாதம் ஒருமுறையாவது போனில் பேசி விடுவோம். என்னப்பா பில்டிங் கட்டி முடிச்சாச்சான்னு அடிக்கடி கால் பண்ணி கேட்பார். திறப்பு விழாவிற்கு அவர் இல்லாமல் போனது ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது என்று கண்கலங்கி பேசியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full