சென்னையில் இருந்தும் மனோபாலா இறப்பிற்கு வராத 5 நடிகர்கள் - இவங்க எல்லாம் கூடவேற நடிச்சாங்க.

By Arun · 7/5/2023

சென்னையில் இருந்தும் மனோபாலா இறப்பிற்கு வராத நடிகர்கள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் மனோ பாலா. எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்து சென்றாலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றார்கள் அந்தவகையில் நடிகர் மனோபாலா ஒருவர். ஆரம்பத்தில் இவர் பாரதிராஜாவிற்கு துணை இயக்குனராக பணியாற்றினார்.

அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களை இயக்கினார். மேலும், சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை ,சதுரங்க வேட்டை 2 போன்ற பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறார் மனோபாலா. அதுமட்டுமல்லாது இவர் சின்னத்திரை தொடர்களையும் இயக்கியிருக்கிறார். இதுவரை இவர் 14 படங்கள், 19 சின்னத்திரை தொடர்களை இயக்கி இருக்கிறார். பின் கடந்த ஜனவரி மாதம் தான் உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மனோ பாலா சேர்க்கப்பட்டார்.

மனோ பாலா மறைவு :

அப்போது அவருக்கு அஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் தேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த சில மாதங்களில் மனோ பாலா காலமாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், மனோபாலாவின் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். ஆனால், சில நடிகர்கள் மனோபாலா இறப்பிற்கு போகாமல் இருந்திருக்கிறார்கள். அந்த நடிகர்கள் எல்லாம் அப்போது சென்னையில் தான் இருந்திருக்கிறார்கள்.

அதோடு இந்த நடிகர்கள் எல்லாம் மனோபாலாவுடன் சேர்ந்து படங்களில் நடித்தவர்கள். இந்நிலையில் அந்த நடிகர்கள் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு, விக்ரம் ஆகியோர் தான் மனோ பாலாவின் இறப்பிற்கு சென்னையில் இருந்தும் நேரில் சென்று விசாரிக்கவில்லை.

சூர்யா:

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. சூர்யா நடிப்பில் வெளிவந்த காக்க காக்க, பிதாமகன், பேரழகன், சிங்கம், கஜினி, மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற படங்களில் மனோபாலா நடித்திருக்கிறார். அதுவும் சூர்யாவின் பிதாமகன் படத்தில் மாமாவாக மனோபாலா செய்திருக்கும் சேட்டைகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

தனுஷ்:

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக தனுஷ் இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. மேலும், தனுஷ் நடிப்பில் வெளிவந்திருந்த தேவதையை கண்டேன், பொல்லாதவன், பரட்டை என்கிற அழகுசுந்தரம், யாரடி நீ மோகினி, மாப்பிள்ளை போன்ற பல படங்களில் மனோபாலா நடித்திருக்கிறார். குறிப்பாக மாப்பிள்ளை படத்தில் ஜோசியம் பார்க்கும் கதாபாத்திரத்தில் தனுஷ்- மனோபாலா காம்பினேஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சிவகார்த்திகேயன்:

தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்திருந்த டாக்டர், டான் போன்ற படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. தற்போது இவர் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை, ரஜினி முருகன் போன்ற படங்களில் மனோபாலா நடித்திருந்தார்.

சிம்பு :

சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் மனோபலன் நடித்திருந்தார். விக்ரம் நடிப்பில் வெளியாகியிருந்த சேது, அருள், அன்னியன் போன்ற படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இப்படி சூப்பர் ஹிட் ஆன படங்களில் இணைந்து மனோபாலா நடித்திருந்தாலும் ஒரே ஊரில் இருந்து கொண்டு இவருடைய இறுதி சடங்கிற்கு நடிகர்கள் போகாதிருப்பது மிகப்பெரிய வருத்தத்தை கொடுப்பதாக மனோபாலாவின் நண்பர்கள் கூறியிருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full