நாடோடிகள் அபிநயாவை கரம் பிடிக்க போகும் காதலன் இவர் தானா? - வைரலாகும் புகைப்படம்

By subhashini · 29/3/2025

முதன் முதலாக தன் வருங்கால கணவரின் புகைப்படத்தை நடிகை அபிநயா வெளியிட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அபிநயா. ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிநயா. மிக அழகான முகம், தோற்றம் உடைய அபிநயா அவர்களுக்கு இயற்கையிலேயே சரியாக வாய் பேச வராது, காது கேட்கும் திறன் குறைபாடு உடையவர்.

இருந்தாலும் இவருடைய தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியினாலும் சினிமாவில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் அபிநயா. அதுமட்டுமில்லாமல் இவரால் சரியாக வாய் பேச முடியாது என்பதே நாடோடிகள் படம் வெளியான பின்னர் தான் பலருக்கும் தெரிந்தது. அதற்குப் பிறகு இவர் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் தமிழில் ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஏழாம் அறிவு, வீரம், பூஜை, தனி ஒருவன், குற்றம் 23, மார்க் ஆண்டனி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

அபிநயா திரைப்பயணம்:

இவர் முதல் முதலில் தெலுங்கு சினிமாவில் தான் அறிமுகமானார். தற்போது இவர் கன்னடா, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மலையாளத்தில் அபிநயா நடிப்பில் வெளியான ‘ பணி’ திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் இவருடைய நடிப்பு வரவேற்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது.

அபிநயா குறித்த தகவல்:

திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் சமீபத்தில் தான் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டது. மேலும், பனி படத்தை ஜோஜு ஜார்ஜ் இயற்றி அபிநயாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தனது மனைவியை கொடூரமாக சீரழித்தவர்களை தேடி பிடித்து ஜோஜூ ஜார்ஜ் பழி வாங்குவது தான் படத்தின் கதை. குறிப்பாக இந்த படத்தில் பலாத்கார காட்சிகளை எல்லாம் ஜோஜு பயங்கர போல்டாக இயக்கியிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=e8aVRtO_nfQ

அபிநயா திருமணம் சர்ச்சை:

அந்தக் காட்சியில் அபிநயாவை பார்த்து ரசிகர்கள், இவர் இவ்வளவு போல்டாக நடிப்பாரா என ஷாக் ஆகிவிட்டனர். இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் கூட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு அபிநயாவை பாராட்டி இருந்தார்கள். பனி படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்கிறார். இதற்கிடையில் அபிநயா அவர்கள் நடிகர் விஷாலை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றெல்லாம் வதந்திகள் இணையத்தில் வைரலாக பரவி இருந்தது. இதற்கு அபிநயா, விஷால் என்னுடைய நல்ல நண்பர். அவரை நான் திருமணம் எல்லாம் செய்யவில்லை.

View this post on Instagram

A post shared by M.g Abhinaya (@abhinaya_official)

அபிநயா காதலன் புகைப்படம்:

சிறு வயதில் இருந்தே என்னுடைய நெருங்கிய நண்பரை தான் நான் காதலித்து வருகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால், அவர் யார் என்று சொல்லவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தான் அபிநயாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. கூடிய விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். இவருடைய நீண்ட நாள் காதலர் சன்னி வர்மா. இவர் பெரிய தொழிலதிபர். அவருக்கு சொந்தமாக பள்ளி, கல்லூரிகள், இறால் ஏற்றுமதி நிறுவனம், பார், ஹோட்டல் பிஸ்னஸ் என பல தொழில்கள் இருக்கிறதாம். தற்போது இவருடைய புகைப்படத்தை தான் அபிநயா வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்கள் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full