'குழந்தையை தத்தெடுக்கத்தான் இந்தியா வந்தோம்' - யாரும் அறிந்திடாத நடிகை அபிராமியின் மறுபக்கம்
பிரபல நடிகை அபிராமி தனது கணவர் குறித்து பேசி இருக்கும் விஷயங்கள்தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 1995 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான 'கதபுருஷன்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. அவருடைய இயற்பெயர் திவ்யா கோபி குமார். மேலும், இவர் 2001 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'வானவில்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த முதல் படத்திலேயே இவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது என்று சொல்லலாம்.
இதை தொடர்ந்து இவருக்கு சினிமா உலகில் பல வாய்ப்புகள் வந்தது. மேலும், நடிகை அபிராமி அவர்கள் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இடையில் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து பிரேக்கில் இருந்த அபிராமி, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் வெளியான மகாராஜா, வேட்டையன் போன்ற படங்களில் அபிராமி நடித்திருந்தார்.
அபிராமி பேட்டி:
இந்நிலையில் நடிகை அமிராமி, தன்னுடைய கணவர் ராகுல் குறித்து பேசியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் மீண்டும் வைரல் ஆகி வருகிறது. அதில், உண்மையில் என் கணவர் ராகுல் எனக்கு ஒரு நல்ல நண்பர் ஆவார். பள்ளிக்காலத்தில் இருந்தே அவரை எனக்கு நன்றாக தெரியும். என் கணவருக்கு சினிமா, கிளாமர், புகழ் உள்ளிட்ட விஷயங்களில் எல்லாம் பெரிதாக ஈடுபாடு கிடையாது. அவர் எப்போதுமே எதார்த்தமான வாழ்க்கையை தான் வாழ விரும்புவார்.
கணவர் குறித்து அபிராமி:
மேலும், நான் எப்போதும் நாம் ஒரு ஹீரோயின் என்கிற ஆகாயத்தில் மிதந்து கொண்டிருப்பேன். அந்த சமயங்களில் என் கணவர் என்னிடம், கொஞ்சம் கீழே இறங்கி வாருங்கள் இந்த உலகம் வேறு மாதிரி ஆனது என்று ஞாபகப்படுத்துவார். அவர் கூறுவது உண்மையிலே எனக்கு தேவைப்பட்டது. வெவ்வேறு மாற்று சிந்தனைகள் கொண்ட நபர்கள் வாழ்க்கையில் கணவன் மனைவி வழியாக இணையும் பொழுது, அது மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அது என் விஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
குழந்தையை தத்தெடுப்பதற்காக தான்:
வெளிநாட்டில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவர், எனக்காக மட்டும் இங்கு வரவில்லை. எங்கள் முழு குடும்பத்திற்காகவும் தான் இங்கே வந்து செட்டில் ஆகிவிட்டார். மேலும் நாங்கள் இங்கு வந்ததற்கான முக்கிய காரணமே ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்காக தான். ஏனென்றால், அதை வெளிநாட்டில் செய்ய முடியாது. அந்த சமயத்தில் அவருக்கு இங்கு வேலை இருந்தது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக நாங்கள் வெளிநாட்டில் தான் வசித்தோம். தற்போது இங்கு எனக்கு பட வாய்ப்பு வருவதால், இங்கே வந்து விட்டோம்.
https://www.youtube.com/watch?v=Z2c-3-ZOTV8
கணவன் மனைவி உறவு:
முக்கியமாக ஒரு கணவன் மனைவியாக இருக்கும் பொழுது ஒருவருக்கொருவர் கணவன் மனைவியாக மட்டுமல்லாமல் நண்பர்களாகவும் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உனக்கு என்ன தேவைப்படுகிறது, உன்னுடைய விருப்பம் என்ன, நீ ஏதாவது தனிப்பட்ட முறையில் சில விஷயங்களை செய்ய விரும்புகிறாயா என்று கேட்டுக் கொள்ள வேண்டும். அவர் ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்தார் என்றால், அது என்னுடைய தோல்வியும் கூட தான். மேலும் அவர் ஜெயிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட தான் என்று அபிராமி பேசியிருக்கிறார்.