விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய சைக்கோ பட நடிகை அதிதி ராவ் - காரணம் இது தானாம்.

By Rajkumar · 20/10/2020

விஜய் சேதுபதி படத்தில் இருந்து நடிகை அதிதி ராவ் விலகியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்னர் இவர் செக்க செவந்த வானம், சைக்கோ போன்ற படங்களில் நடித்து தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். இப்படி ஒரு நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் 'துக்ளக்' படத்தில் இருந்து நடிகை அதிதி ராவ் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டே இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது பின்னர் பிரச்சினை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் அப்படியே நின்றுபோனது. தற்போது, லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, துக்ளக் தர்பார் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் துக்ளக் தர்பார் படத்தில் இருந்து அதிதி ராவ் திடீரென்று விலகி விட்டார் . கொரோனா லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட கால்ஷீட் பிரச்னையால் அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.

அதிதி ராவ், லாக்டவுனுக்கு முன் ஒரு சில படங்களுக்கு கால் ஷீட் கொடுத்துள்ளார். ஆனால், லாக்டவுன் பிரச்சனை காரணமாக நின்று போன பல படத்தின் படபிடிப்புகள் தற்போது துவங்கியுள்ளதால் படதிற்கு கால் ஷீட்டில் பிரச்சனை ஏற்பட்டதால் துக்ளக் படத்தில் இருந்து விலகிவிட்டாராம் நடிகை அததி ராவ், தற்போது இவருக்கு பதிலாக நடிகை ரஷி கண்ணா இந்த படத்தில் இணைந்துள்ளாராம். நடிகை ரஷி கண்ணா ஏற்கனவே சங்கத் தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துக்ளக் படத்தில் இருந்து அதிதி விலகிய காரணத்தை இந்த படத்தின் இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் கூறும்போது, கால்ஷீட்டை சரி செய்து பார்த்தோம். அதிதி ராவுக்கு வேறு படங்களின் கமிட்மென்ட் இருந்தால், அவர் நடிக்க முடியவில்லை. அடுத்த சாய்ஸாக எங்களுக்குத் தெரிந்தது ராஷி கண்ணா. மார்வாரி பெண் கேரக்டருக்குப் பொருத்தமாக இருந்தார் என்று கூறியுள்ளார். ஏற்கனவே இந்த படம் குறித்து பேசி இருந்த அதிதி ''

Tamil Behind Talkies AMP · Quick view
View full