தன்னிடம் தவறான எண்ணத்தில் நடந்து கொண்ட நபரை ஐஸ்வர்யா லட்சுமி வெளுத்து வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 2017 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல என்ற படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். பின் விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஜகமே தந்திரம் , கார்கி, கேப்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகியது பொன்னியின் செல்வன் படம் தான். மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பொன்னியின் செல்வன்.

Advertisement

பொன்னியின் செல்வன் படம்:

பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் தான் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி இருந்தார்கள்.

ஐஸ்வர்யா லட்சுமி திரைப்பயணம்:

இந்த படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி அட்டகாசமாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் கட்டா குஸ்தி. இந்த படத்தை இயக்குனர் கட்டா அய்யாவு இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால், ரவி தேஜா, ஐஸ்வர்யா லட்சுமி, முனிஸ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

Advertisement

கட்டா குஸ்தி படம்:

இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். குஸ்தி சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தின் கதாநாயகன் என்று பார்த்தால் கதாநாயகியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி தான். இந்த படத்தில் அவர் ஆக்ஷனில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். ஒரு கமர்சியல், காமெடி, என்டர்டைன்மென்ட் படமாக கட்டா குஸ்தி இருக்கிறது. இப்படி இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement

ஐஸ்வர்யா லட்சுமி அளித்த பேட்டி:

இந்த நிலையில் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நபரை ஐஸ்வர்யா லட்சுமி வெளுத்து வாங்கி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, கட்டா குஸ்தி படத்தின் ப்ரோமோஷனுகாக ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, நான் இதுவரை எந்த ஒரு நகைச்சுவை படத்திலும் நடிக்கவில்லை. முதன் முறையாக கட்டா குஸ்தி திரைப்படத்தில் தான் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த படம் எனக்கு ஒரு சவாலாக இருந்தது. இந்த படத்தில் குஸ்தி வீராங்கனியாக நடித்தது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் ஒரு நபர் என்னை தவறான எண்ணத்தில் தொட்டார். அந்த நபரை நான் அடித்திருக்கிறேன். அதற்குப் பிறகு இது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று கூறியிருந்தார்.

Advertisement