சோசியல் மீடியா என் சிந்தனை, சொல், மொழி எல்லாம் பறித்து விட்டது - ஐஸ்வர்யா லட்சுமி உருக்கம்

By subhashini · 13/9/2025

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 2017 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். பின் விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஜகமே தந்திரம் , கார்கி, கேப்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாக்கியது பொன்னியின் செல்வன் படம் தான். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். தமிழ் ரசிகர்கள் மட்டும் வெளியாகி உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி இருந்தார்கள். இந்த படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி அட்டகாசமாக நடித்திருந்தார்.

ஐஸ்வர்யா லட்சுமி திரைப்பயணம்:

இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து இருந்தது. இதனை அடுத்து இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் கட்டா குஸ்தி. குஸ்தி சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஆக்ஷனில் பின்னி பெடல் எடுத்திருந்தார். அதன் பின் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாமன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஐஸ்வர்யா லட்சுமி பதிவு:

இந்த படத்தில் ஹீரோவாக சூரி கலக்கி இருந்தார். இதை அடுத்து தற்போது ஐஸ்வர்யா லட்சுமி கட்டா குஸ்தி 2 என்ற படத்தில் நடிக்கிறார். அது மட்டுமில்லாமல் இன்னும் சில படங்களில் ஐஸ்வர்யா கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் இருந்து விலக இருப்பதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர்,
என்னை இந்த சினிமா துறையில் தக்க வைத்துக்கொள்ள சமூக ஊடகங்கள் ரொம்ப முக்கியமானது என்று நான் நீண்ட காலமாக நினைத்திருந்தேன். ஆனால், இருக்கும் துறையினுடைய தன்மையை கருத்தில் கொண்டு காலத்துக்கு ஏற்ப மாறுவது அவசியம் என்று நினைத்தேன்.

சமூக ஊடங்களில் விலகல்:

சமூக ஊடகங்கள் என்னை தலைகீழாக மாற்றி இருக்கின்றது. என்னுடைய பணிகளில் இருந்து திசை திருப்புகிறது. என்னுள் இருந்த சில சிந்தனையை பறித்து விட்டது. என்னுடைய சொல், மொழி எல்லாமே பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு எளிய இன்பத்தையும் மகிழ்ச்சியற்றதாக மாற்றி இருக்கிறது. நான் ஒரு பொதுவானவளாக சூப்பர்நெட்டின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப வாழ விரும்பவில்லை. நான் கலைக்காக சரியானதை செய்ய விரும்புகிறேன். அதனால் இணைய உலகத்தில் இருந்து விலக முடிவு எடுத்து இருக்கிறேன். அர்த்தமுள்ள உறவுகளையும் சினிமாவையும் உருவாக்குவேன் என்று நம்புகிறேன். உங்கள் அன்பை கொடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full