கெட்ட வார்த்தையில் வெளுத்து தள்ளியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் - வாயை பிளந்துள்ள இயக்குனர். வீடியோவை பாருங்க.

By Rajkumar · 20/8/2020

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்.சமீபத்தில் வந்த கனா படம் கூட இவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது.

https://twitter.com/cinemaforlife__/status/1295572918491987968

டிகை ஐஸ்வர்யா, ராஜேஷ் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் சரத் குமார், ராதிகா,விக்ரம் பிரபு நடித்துள்ள 'வானம் கொட்டட்டும்' என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதிலும் வட சென்னை படத்தில் நார்த் மெட்ராஸ் பெண்ணாக நடித்து அசத்தி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கெட்ட வார்த்தைகளில் வெளுத்து வாங்கி இருந்தார். இந்த படத்தில் நடித்த போது இயக்குனர் வெற்றிமாறன், எதாவது தெரிந்த கெட்ட வார்த்தை பேச சொன்னாராம், உடனே கண்ணை மூடிக்கொண்டு பல கெட்ட வார்த்தைகளை பேசினாராம். பின்னர் திரும்பி பார்த்தால் வெற்றிமாறன் ஆச்சரித்தோடு பார்த்த படியே நின்று கொண்டு இருந்தாராம். பின்னர் நீ தான்மா இந்த படத்திற்கு ஹீரோயின் என்று சொன்னாராம்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இறுதியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில்நடித்திருந்தார் . இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருந்தார் .தற்போது தமிழில் போன்று தெலுங்கு சினிமாவிலும் பிரபலமாகியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full