இதான்டா என் ஒரிஜினல் முகம் பாத்துக்கோ - ஆபாச மெசேஜ் செய்தவருக்கு வீடியோ வெளியிட்டு செருப்படி பதில் கொடுத்த ஐஸ்வர்யா.

By Arun · 19/4/2023

போனில் ஆபாச மெசேஜ், புகைப்படங்களை அனுப்பியதற்கு கோபத்தில் ஐஸ்வர்யா லட்சுமி திட்டி வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய உண்மையான பெயர் சாந்தா. இவர் தன்னுடைய பெயரை ஐஸ்வர்யா என மாற்றிக் கொண்டார்.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்தவர் ஐஸ்வர்யா. நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் மில் தொழிலாளி, தையல்காரர், ராசுகுட்டி உட்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து இருக்கிறார்.

ஐஸ்வர்யா நடித்து இருக்கும் படம்:

பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லியாகவும் மிரட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் ஐஸ்வர்யா பங்கு பெற்று இருக்கிறார். அந்த வகையில் விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூட நடுவராக ஐஸ்வர்யா பங்கேற்றிருந்தார். பின் இவர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய்யின் நடிப்பில் வெளியாகி இருந்த யானை படத்தில் நடித்து இருக்கிறார்.

ஐஸ்வர்யா செய்யும் தொழில்:

அதற்கு பின் இவருக்கு பெரியதாக பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் இவர் வாழ்க்கை நடத்துவதற்காக சொந்தமாக தொழில் செய்து வருகிறார். தற்போது இவர் சோப்பு தயாரித்து அதை வீடு வீடாக விற்று வருகிறார். இது குறித்து கூட சமீபத்தில் ஐஸ்வர்யா பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், நான் இப்போது வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் இருக்கிறேன். இந்த நிலை மாறவேண்டும் என்றால் எனக்கு வேலை வேண்டும். வேலையும் இல்லாததால் வீடு வீடாக சென்று சோப்பு விற்றுக் கொண்டு இருக்கின்றேன் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

ஆபாச மெசேஜ் :

மேலும், இவர் ஒரு youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் பெண்கள் தொடர்பான மேக்கப் சாதனங்கள், சோப்பு போன்ற பொருள்களை வீட்டில் இருந்தபடியே எப்படி செய்வது என்ற வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவர் அந்த வீடியோவில் தன்னுடைய whatsapp எண்ணையும் பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் இவருடைய whatsapp எண்ணிற்கு ஆபாச முறையில் சில விஷ கிருமிகள் மெசேஜ் செய்து தொந்தரவு கொடுத்திருக்கின்றனர்.

https://www.youtube.com/watch?v=FD1Vix0ULg8

கோபத்தில் ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ:

வயதான ஆண்கள் கூட அந்தரங்க உறுப்புகள் எல்லாம் புகைப்படம் எடுத்து இவருடைய whatsapp எண்ணிற்கு
அனுப்பி இருக்கிறார்கள். இதை எல்லாம் பொறுத்து கொண்ட ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் கோபத்தில் அனைவரையும் திட்டி வீடியோ ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர், வயதானாலும் நீ சும்மா கும்முன்னு இருக்க என்று அருவருத்தக்க ஆபாச புகைப்படங்களை எனக்கு அனுப்புகிறார்கள். இதெல்லாம் உங்களுக்கு அசிங்கமாக இல்லையா? 52 வயது கிழவி தான் நான். சோப்பு தான் விற்கிறேன். என்னை விற்கவில்லை என்று கோபமாக திட்டி பேசி இருக்கிறார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full