பாலியல் சர்ச்சை ! மேனேஜர் காரணமா ? உண்மையை கூறும் அமலா பால் !

By Ajju · 13/2/2018
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகை அமலாபால், டான்ஸ் ஸ்டுடியோவில் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தாக போலீசில் புகார் கூறினார். இதன் காரணமாக சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். மேலும், அமலாபாலின் மேனேஜர் பிரதீப்பும் இந்த பாலியல் சீண்டலுக்கு காரணம் எனவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது அது உண்மையில்லை, அது அடிப்படை ஆதரமற்ற செய்தி என அமலாபால் கூறியுள்ளார். இது தொடர்பாக அமலாபால் அளித்த அறிக்கையில், என மேனேஜர் பிரதீப் குமாருக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது ஒரு அடிப்படை ஆதமற்ற குற்றச்சாட்டு. போலீஸ் விசாரணை நடக்கிறது. அது நடந்து முடியட்டும் என எதுவும் பேசாமல் இருந்தேன். ஆனால், இந்த பிரச்சனைக்கும் பிரதீப்குமாருக்கு எந்த சம்மந்தமும் இல்லை. எனக்கு வேண்டாதவர்கள் இந்த பிரச்சனையை திசை திருப்பி பெரிதாக மாற்ற முயற்சி செய்கின்றனர்.என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் சர்ச்சை நடிகை அமலாபால். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாண்டிசேரியில் கார் வாங்கி வரி ஏய்ப்பு தொடர்பாக அமலாபால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full