'இந்தியன் 2வில் இது இருந்திருக்கலாம்' படத்தை தூக்கிய பிறகு நடிகை அம்பிகா கொடுத்த ஐடியா- என்ன தெரியுமா?

By ·

'இந்தியன் 2' படத்தில் இதை செய்திருக்கலாம் என்று நடிகை அம்பிகா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி இருந்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் இயக்குனர் சங்கர்-கமல் எடுத்திருக்கிறார்கள்.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், ராகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெகன், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படம் வெளியான முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவான விமர்சனத்தை பெற்றது. அதோடு படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

இந்தியன் 2 படம்:

‘இந்தியன்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு ‘இந்தியன் 2’விற்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லணும். அதோடு சங்கர் இயக்கிய படத்திலேயே இந்த படம் பெரும் தோல்வி என்று கூறப்படுகிறது. மேலும், நாட்கள் செல்ல செல்ல இந்த படத்திற்கு திரையரங்கில் கூட்டம் குறைந்தது. இதனால் படத்தின் நீளத்தை அதாவது, 12 நிமிட காட்சிகளை குறைத்து வெளியிட்டு இருந்தார்கள். இருந்தாலுமே இந்த படம் பெரிய அளவு ரசிகர்களை கவரவில்லை.

அம்பிகா பதிவு:

இதனாலே அனைத்து தியேட்டர்களிலும் இந்தியன் 2 படத்தை தூக்கி விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் தனுஷின் 'ராயன்' படம் தற்போது வெளியாகி இருப்பதால் தான் இந்தியன் 2 படத்தை தூக்கி விட்டார்கள் என்று கூறப்படுகிறது. தனுஷ் உடைய ராயன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்தியன் 2 படம் குறித்து நடிகை அம்பிகா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியன் 2 படம் குறித்து சொன்னது:

அதில் அவர், இந்தியன் 2 படத்தை பார்த்தேன். எனக்கு படம் ரொம்ப பிடித்திருந்தது. ஆனால், படத்தினுடைய நீளம் 15 நிமிடங்கள் இன்னும் குறைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. கடின உழைப்பு, நடிப்பு, அதிக செலவு எல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை படத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே படத்தினுடைய 12 நிமிடங்கள் காட்சிகள் குறைக்கப்பட்ட நிலையில் இன்னும் 15 நிமிட காட்சிகளை குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அம்பிகா தெரிவித்திருந்தது தான் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இந்தியன் 2 படம் கதை:

படத்தில் சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய சுதந்திர வீரர்களில் ஒருவர் சேனாதிபதி. இவர் லஞ்சம் ஊழலுக்கு எதிராக போராடுபவர். தற்போது இரண்டாம் பாகத்தில் சித்தார்த், தன்னுடைய நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜெகன் ஆகியோர் இணைந்து சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்கிறார்கள். இதற்காக அவர்கள் போராடவும் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது, என இந்தியன் தாத்தாவை வர வைக்கிறார். மீண்டும் இந்தியா வரும் கமலை கைது செய்ய போலீஸ் அலைந்து கொண்டிருக்கிறார். இதனால் சேனாதிபதி என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? குற்றவாளிகளை தண்டித்தாரா? கடைசியில் என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதி கதை.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை