குழந்தையை நாய் கொதர்ர வர பெற்றோர்கள் எங்க போனீங்க, அழுக சத்தம் கேட்கல - அம்மு சொன்ன விஷயம்
சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்கே தெருநாய் விவகாரம் தான். தெரு நாய்களின் மூலம் முதியவர்கள், குழந்தைகள் என பல பேர் கடிபட்டு பாதிக்கப்பட்டு இருப்பதால் தான் இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்து இருக்கிறது. பிரபலங்கள் சிலர் தெரு நாய்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும் சிலர் தெரு நாய்கள் நகரத்தில் இருக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக கூட நீயா நானா நிகழ்ச்சியில் விவாதம் நடத்தி இருந்தார்கள். இதில் தெருநாய்கள் நகரத்தில் வசிக்க கூடாது, தெருநாய்களுக்கும் நகரத்தில் வசிக்க உரிமை இருக்கிறது என்று இரு தரப்பில் விவாதம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த படவா கோபி நாய்க்கு ஆதரவாக பேசி இருந்ததை பலரும் ட்ரோல் செய்திருந்தார்கள். இவரை தொடர்ந்து நடிகை அம்மு ராமச்சந்திரன் நீயா நானா நிகழ்ச்சியில் தெரு நாய்களுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இவர் மனிதர்களின் உயிருக்கு பாதிப்பு வந்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால், விலங்குகள் எல்லாம் பாதிக்க கூடாது என்பது போலவே பேசி இருந்தார். ஒரு நாய் குறுக்கே வந்து குழந்தை அநியாயமாக உயிர் போனதை பற்றி கவலைப்படாமல் எலி செத்துப் போனதை நினைத்து வருத்தப்பட்டு பேசியிருந்தார். இவர் இப்படி பேசி இருந்ததை பார்த்து பலருமே அம்முவை ட்ரோல் செய்தும் விமர்சித்தும் வந்தார்கள்.
தெருநாய் சர்ச்சை:
பின் இது தொடர்பாக நடிகை அம்மு வெளியிட்ட வீடியோவில், நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை வைத்து பலரும் ட்ரோல் பண்ணிட்டு இருக்கீங்க. நிறைய தவறான வார்த்தைகளை நீங்கள் யூஸ் பண்ணுகிறீர்கள். அதற்கு வருத்தப்பட்டு நான் இந்த வீடியோவை போடவில்லை. நீயா நானாவில் என்ன நடந்தது என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்தணும் என்பதற்காக தான் இந்த வீடியோவை போட்டு இருக்கிறேன். நீயா நானா நிகழ்ச்சியின் எடிட் பண்ணாத வெர்ஷன் பார்த்தீங்கன்னா என்ன நடந்தது என்ற கதை உங்களுக்கு தெரியும். ஒரு பக்கம் நாயை விரும்புவார்கள் தெருநாயை ஆதரிக்கிறோம் என்று பேசி இருந்தோம். இன்னொரு பக்கம் வேண்டாம்னு சொல்லுறவங்க இருந்தார்கள்.
@Actress_Ammu நீயெல்லாம் சோறு தான தின்னுற இல்ல 🐷 தின்னுமே அத தின்னுறியா ?
— VediVijay_08 ❤️🩹 (@Vedivijay_08) September 1, 2025
உன்ன யாராவது கைய புடிச்சு இழுத்தா அது பெயர் காதல்னு சொல்லுவியா ?#NeeyaNaana pic.twitter.com/DVpXTq4OMG
அம்மு வீடியோ:
ஆப்போசிட் சைடு இருந்தவர்களுக்கு தான் வாய்ப்புகள் அதிகம். நாய்களால் பாதிக்கப்பட்டவர்களை தான் அழைத்து வந்து அங்க பேச வைத்தார்கள். எங்களை பேசவும் விடவில்லை. அப்படியே பேச வந்தாலும் கோபி அவர்கள் பேசவே விடவில்லை. நீங்க டிஆர்பிக்காக எதுக்கு இவ்வளவு மோசமாக விளையாடினீங்கன்னு எனக்கு புரியவில்லை. இதுவரைக்கும் எந்த சேனல் பற்றியும் நான் இப்படி ஒரு வீடியோ போட்டதே கிடையாது. இதனால் பர்சனல் ஆக பாதிக்கப்பட போவது நாய்கள் மட்டும் இல்லை நாங்களும் தான். மக்களே நமக்கு நாய்கள் வேணும், அதே மாதிரி அந்த நாய்களிடமும் கடிவாங்காமல் எப்படி தோழமையோடு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சொல்யூஷன் கிடைக்கும் என்று தான் நாங்கள் இந்த நிகழ்ச்சிக்கு போனோம் என்று ஆதங்கத்துடன் பேசி இருந்தார்.
ஈ லோகத்தில் ஈன பிறவி ஒன்று உன்டெங்கினில் அது இந்த ஈன முண்ட தான் சாரே @Actress_Ammu
— Simon (@vanam_offcl) September 1, 2025
pic.twitter.com/jZWaVKArpI
அம்மு பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் நடிகை அம்மு, எனக்கு இருக்கிற கோபமான விஷயமே, குழந்தைகளை நாய் கடித்து கொதர்ர வரைக்கும் பெற்றோர்கள் எங்க போனீங்க? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எங்க போனீங்க? அந்த குழந்தைகளோட அழுகை சத்தம் உங்களுக்கு கேட்கவே இல்லையா, சாதாரணமாக ஒரு நாயை விரட்டக் கூடியவர்கள் அது குழந்தையை கடிக்கும் வரை என்ன செய்தார்கள். எங்களுடைய நாலு கால் இருக்கும் ஜீவன் வித்தியாசமாக கத்தினாலே நாங்கள் ஓடிவந்து பார்ப்போம். ஒரு குழந்தை நாய் கடியால் கதறும் போது அதை பார்த்துக்கொண்டு சும்மாவா இருந்தீங்க.
உன்ன மாதிரி ஒரு தற்குறி ஈன பிறவிய பாத்ததில்ல மூதேவி @Actress_Ammu pic.twitter.com/FkqQkEUcqo
— Simon (@vanam_offcl) August 31, 2025
நெட்டிசன்கள் கருத்து:
அந்த குழந்தையை காப்பாத்தணும்னு யாருக்குமே தோணலையா? இதற்கு உங்களிடம் பதில் இருந்தால் எல்லாவற்றுக்குமே பதில் இருக்கும் என்று கூறியிருந்தார். அம்முவின் இந்த பேச்சைக் கேட்டு பலருமே கொந்தளித்து திட்டி தீர்த்து வருகிறார்கள். அதில் சிலர், நீங்கள் கிச்சனில் பிஸியாக இருக்கீங்க. உங்க குழந்தை பந்து வைத்து விளையாடுது. அப்போ அந்த பந்து தெருவுக்கு போய்விடுகிறது. அதனால் குழந்தையும் பால் எடுக்க ஓடிப் போகிறது. தெரு நாய் உங்க குழந்தையை கடிக்குது. அப்போ உங்களை பார்த்து நீங்களே இந்த கேள்வி கேப்பீங்களா அம்மு மேடம்? ஏன் குழந்தைங்க தெருவில் விளையாடவே கூடாதா? என்றெல்லாம் சராமாறியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்