ஏ.ஆர்.ரகுமானே படத்துல இல்ல, நான் எம்மாத்திரம்னு மனச தேத்திக்கிட்டேன் - நடிகை ஆனந்தியின் குமுறல்

By subhashini · 25/3/2026

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இருவரும் இணைந்து இருக்கிறார்கள்.

இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக இருக்கிறார். இந்த படத்தில் சுவாசிகா, ஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகை இந்திரன்ஸ், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தினுடைய ரிலீஸ்க்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கருப்பு படம்:

இந்த படம் மே 14ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த படத்தின் இருந்து முதல் சிங்களான காட் மோட் வெளியாகியிருந்தது. சமீபத்தில் தான் இரண்டாவது சிங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் தான் நடித்த காட்சிகளை தூக்கி விட்டதாக நடிகை ஆனந்தி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

ஆனந்தி பேட்டி:

இது தொடர்பாக அளித்த பேட்டியில் நடிகை ஆனந்தி, காளி வெங்கட்டும் நானும் நடித்திருந்தோம். அவருக்கு ஜோடியாக தான் நான் நடித்தேன். ஆனால், கொஞ்ச நாள் முன்னாடி எஸ் ஆர் பிரபு சாரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போ அவரிடம் பேசிய போது, படத்தில் நிறைய காட்சிகள் எடிட்டில் போய்விட்டது. நீங்கள் பண்ணின காட்சிகள் கூட வரும்னு சொல்ல முடியாதுன்னு சொன்னார். சினிமாவில் இது சகஜமானது தான். பெரிய நடிகர்கள் படங்களில் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்று. சிலர் அதை நேர்மையாக சம்பந்தப்பட்டவர்களிடம் அழைத்து சொல்லி விடுவார்கள்.

காட்சிகள் நீக்கம்

சிலர் சொல்லவே மாட்டார்கள். நாம் நடித்தது படத்தில் இருக்குமோ? இல்லையா? என்பதை முதல் நாள் தியேட்டர் போய் ஒரு தவிப்போட பார்க்க வேண்டிய நிலைமை நிறைய பேர் வந்திருக்கு. ஆனால், இதை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்பது தான் வருத்தம். ஆனால் ஒரு முழு படமாக கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறவர்கள் அவங்க விருப்பப்படிதானே விரும்புவார்கள். அதனால் டேக் இட் ஈசி என்று கடந்து போயிட்டேன். ஏ ஆர் ரகுமானே படத்தில் இல்லாத போது நான் மட்டும் எம்மாத்திரம் என்று மனதுக்குள் சொல்லி விட்டேன் என்றார்.

behindtalkies AMP · Quick view
View full