நேற்று சிங்கப்பெண், இன்று சிறைப் பெண் - மாஸ் காட்ட நினைத்து கைதான நடிகை+ பா.ஜ.க பிரமுகர். வீடு புகுந்து தூக்கிய போலீசார்.

By subhashini · 4/11/2023

படிக்கட்டில் தொங்கி இருந்த மாணவர்களை சின்னத்திரை நடிகை அடித்து வெளுத்து வாங்கி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புட்போர்ட் அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களை ரூட்டுத்தல என்று நினைத்துக் கொண்டு படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கிறார்கள். இது அதிகம் சென்னை பகுதியில் தான் அதிகம் நடக்கிறது.

https://www.youtube.com/watch?v=LQRHg9Z92pY&feature=youtu.be

மேலும், இதுகுறித்து பல விழிப்புணர்வு நடந்தாலும் மாணவர்கள் அதை கண்டு கொள்வதே இல்லை. குறிப்பாக, அரசு பேருந்துகளில் தான் இந்த மாதிரி நிறைய சம்பவம் நடக்கிறது. இதனால் நிறைய விபத்துகளும் ஏற்பட்டிருக்கிறது. இதை பேருந்தில் இருப்பவர்கள் தட்டி கேட்டால் அவர்களிடம் சண்டைக்கும் செல்கிறார்கள். இதனாலே பலபேர் எதற்கு என்று ஒதுங்கி விடுகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிய படியே பயணம் செய்து இருந்தார்கள்.

ரஞ்சனா செய்த செயல்:

கொஞ்சம் சுதாரிக்காவிட்டாலும் அந்த மாணவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்திருப்பார். அப்போது சின்னத்திரை நடிகை ரஞ்சனா பேருந்தை மறித்து டிரைவரை சராமாரியாக கேள்வி கேட்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பேருந்தில் தொங்கிய மாணவரின் கன்னத்தில் அறைந்து இருக்கிறார். பின் படிக்கட்டில் தொங்க கூடாது என்று அந்த மாணவனை வெளுத்து வாங்கி அறிவுரை சொல்லி இருக்கிறார். இப்படி நடிகை ரஞ்சனா செய்த செயல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/vannikural/status/1720489023183913352?s=48

ரஞ்சனா படிப்பு:

இதை பார்த்த பலருமே அவரை பாராட்டி வருகிறார்கள். ஆனால், வழக்கம்போல் சிலர் இவருக்கு யார் இந்த உரிமையை கொடுத்தது? எப்படி அந்த மாணவனை அடிக்கலாம் என்று சர்ச்சைகளையும் கிளப்பி இருக்கிறார்கள். அதோடு மாணவரை தாக்கியது, ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் ரஞ்சனா நாச்சியாரை போலீஸ் கைது செய்து இருக்கிறது. தற்போது இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரை சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருப்பவர் ரஞ்சனா.

ரஞ்சனா நடித்த படங்கள்;

இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர். இவர் மென்பொருள் பொறியியல் எம்எஸ்சி எம்டெக், சட்டத்துறையில் எம் எல் பி படித்திருக்கிறார். இவர் வழக்கறிஞரும் ஆவார். சினிமாவின் மீது இருந்த ஆசையின் காரணமாக ரஞ்சனா சின்னத்திரைக்கு வந்து விட்டார்.இவர் முதலில் சீரியல் நடித்துக் கொண்டு இருந்தார். அதற்கு பிறகு துப்பறிவாளன், இரும்புத்திரை, ஹீரோ, பில்லா பாண்டி, வேட்டை நாய், தேவராட்டம், கொம்பு வச்ச சிங்கம்டா, எதற்கும் துணிந்தவன், சிவகுமாரின் சபதம், நட்பே துணை, அண்ணாத்த, டைரி போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Sun News Tamil (@sunnews)

ரஞ்சனா கைது :

அது மட்டும் இல்லாமல் இவர் தன்னுடைய வழக்கறிஞர் பணியையும் தொடர்ந்து கொண்டு வருகிறார். தற்போது இவர் வில்லியாக மாயா படத்திலும், தம்பி ராமையா மகன் உமாபதி நடித்திருக்கும் லிவிங்டுகெதர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.மேலும், இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருந்தார். இதற்காக இவர் சிலம்பம், சுருள்வாள்வீச்சு, குதிரை ஏற்றம் போன்றவற்றையெல்லாம் கற்று இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த வாய்ப்பு இவர் கையை விட்டு சென்றது. இருந்தாலும், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ரஞ்சனா நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full