சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை குறித்து வணங்கான் பட நடிகை அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே சோசியல் மீடியா பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அதன் மூலம் சாதாரண மக்கள் கூட பிரபலமாகி இருக்கிறார்கள். சோசியல் மீடியாவில் பிரபலம் மட்டுமில்லாமல் சினிமா வாய்ப்பு, வருமானம் என்று எல்லாமே கிடைக்கிறது. அந்த வகையில் யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் ரேகா.

இவர் யூடியூப் இல் பிராங்க் வீடியோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தங்கவேலு கண்ணன் உருவாக்கிய கண்டேன் உன்னை தந்து விட்டேன் என்னை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அதற்குப் பின் இவர் யூடியூப் சேனல்களில் ஷார்ட் பிலிம், வீடியோக்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தன்னுடைய சினிமா நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

Advertisement

வணங்கான் படம்:

இன்னொரு பக்கம் சினிமா வாய்ப்பையும் தேடிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் இயக்குனர் பாலா இயக்கி வரும் வணங்கான் என்ற படத்தில் நடித்திருக்கிறார். முதலில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் சூர்யா நடிக்க கமிட் ஆகி இருந்தார். ஆனால், திடீரென்று இந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார். அதே போல் இந்த படத்துக்கு முதலில் கீர்த்தி செட்டி கதாநாயகியாக ஒப்பந்தமாக இருந்தார். அவரும் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

ரேகா பேட்டி:

தற்போது அருண்விஜய் நடித்து வருகிறார். இந்த படம் கூடிய விரைவிலேயே வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை ரேகா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் சினிமா குறித்து கூறியிருந்தது, சினிமாவில் பெண்கள் என்பதால் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொல்கிறார்கள். பெரும்பாலான இயக்குனர்கள் கேரளா, பெங்களூரில் நன்றாக உடல் வாக்கு கொண்ட பெண்களுக்கு தான் வாய்ப்பு தருகிறார்கள். இதனால் தான் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வாய்ப்பே கிடைப்பதில்லை. சீரியல்களில் கூட இந்த நிலைமை தான் அதிகமாக இருக்கிறது.

Advertisement

சினிமா குறித்து சொன்னது:

நான் வாய்ப்பு தேடும் போது சில பேர் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொல்லி கேட்டார்கள். அந்த நேரத்தில் எனக்கு ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது. இதை நான் என்னுடைய அப்பா, நண்பர்களிடம் சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டேன். எனக்கு திறமை இருக்கிறது. ஆனால், அதை வெளிப்படுத்த வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. பின்னால் பிராங்க் வீடியோ எல்லாம் பண்ணேன். அதை பார்த்து தான் இயக்குனர் பாலா சார் அவருடைய ஆபீசுக்கு என்னை நேரடியாகவே அழைத்து வாய்ப்பு கொடுத்தார்.

Advertisement

தன் அப்பா செய்த செயல்:

நான் பாலா சார் படத்தில் நடிப்பதற்கு முன்பு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தேன். அதற்குப் பிறகுதான் கண்டேன் உன்னை தந்தேன் என்ற படத்தில் நடித்தேன். அந்த படம் வந்த போது தான் லவ் டுடே படம் வந்தது. என்னோட அப்பா என் படத்தை பார்க்க வந்து இடைவேளை போது லவ் டுடே படத்தினுடைய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். என்னுடைய படம் 5 நாட்கள் மட்டும் தான் ஓடியது. சினிமாவைத் தாண்டி சின்ன சின்ன நடிகர்களுக்கும் யூடியூப் சேனல் தான் இப்போது கை கொடுத்து வருகிறது என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Advertisement